»   »  அசின் - ராகுல் திருமணம் நடந்தது.... இன்று டெல்லி பண்ணை வீட்டில் பிரமாண்ட விருந்து!

அசின் - ராகுல் திருமணம் நடந்தது.... இன்று டெல்லி பண்ணை வீட்டில் பிரமாண்ட விருந்து!

Posted by:
Subscribe to Oneindia Tamil

நடிகை அசின் - ராகுல் சர்மா திருமணம் இந்து - கிறிஸ்தவ முறைப்படி நடந்து முடிந்தது. இன்று மாலை டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.

கேரளாவைச் சேர்ந்த நடிகை அசின் கடந்த 2001-ம் ஆண்டு மலையாள திரை உலகில் அறிமுகம் ஆனார். தமிழில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி‘ படத்தில் அறிமுகமானார்.

கஜினி

2005-ல் சூர்யாவுடன் அவர் சேர்ந்து நடித்த ‘கஜினி' படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன் மூலம் தமிழ் நடிகைகளில் முதலிடத்தைப் பிடித்தார். தொடர்ந்து கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.

பிற மொழிகள்

தமிழ் தவிர தெலுங்கிலும் இவர் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்தார். தெலுங்கில் அவர் நடித்த ‘லட்சுமி நரசிம்மா', ‘கர்சனா' படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அங்கும் அவருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

இந்தியில்...

தமிழில் வெளியான கஜினி இந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோது, அதிலும் அசின்தான் நாயகியாக நடித்தார். அந்தப் படத்தின் வெற்றியால், ஒரேயடியாக அவர் பாலிவுட்டில் குடியேறினார். ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு வேறு இந்திப் படங்கள் சரியாக ஓடவில்லை.

காதல்

அப்போது பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் மூலம் அசினுக்கு மைக்ரோ மேக்ஸ் நிறுவனர்களில் ஒருவரான ராகுல் சர்மாவுக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அசினும், ராகுல் சர்மாவும் காதலர்களாக மாறினார்கள்.

திருமணம்

அவர்கள் திருமணத்துக்கு இருவீட்டிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. நடிகை அசின் கொச்சியை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர். ராகுல்சர்மா வட மாநிலத்தை சேர்ந்த இந்து ஆவார். எனவே எந்த மத முறைப்படி திருமணம் செய்வது என்று இரு தரப்பிலும் ஆலோசிக்கப்பட்டது.

2 தடவை திருமணம்

இறுதியில் இந்து, கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஒரே நாளில் காலையில் கிறிஸ்தவ முறைப்படியும், மாலையில் இந்து முறைப்படியும் 2 தடவை திருமணத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

சர்ச் - கோவில் செட்

அசின்-ராகுல் சர்மா திருமணத்துக்காக டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஓட்டலின் ஒரு பகுதியில் கிறிஸ்தவ சர்ச் போன்று செட் அமைத்திருந்தனர். மற்றொரு பகுதியில் இந்து கோவில் போன்று செட் போடப்பட்டிருந்தது.

50 பேர்தான்

பாதுகாப்பு கருதி இரு தரப்பினரும் தங்கள் நெருங்கிய உறவினர்களை தவிர வேறு யாரையும் திருமணத்துக்கு அழைக்கவில்லை. செவ்வாய்க்கிழமை காலை அசின்-ராகுல் சர்மா திருமணம் ஓட்டலில் உள்ள சர்ச்சில் நடந்தது. சுமார் 50 பேர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்ததும் அசினும், ராகுலும் பிரமாண்ட கேக் வெட்டி ஊட்டிக் கொண்டார்கள்.

சைவ விருந்து

நேற்று மாலை அசினுக்கும், ராகுல் சர்மாவுக்கும் ஓட்டலில் மற்றொரு பகுதியில் உள்ள இந்து கோவிலில் திருமணம் நடந்தது. இதில் 200 பேர் கலந்து கொண்டனர். இரவு சைவ விருந்து அளிக்கப்பட்டது.

பிரமாண்ட விருந்து

இன்று புதன்கிழமை ராகுல் சர்மா டெல்லியில் உள்ள தனது சோனாலி பண்ணை வீட்டில் பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் திரையுலகப் பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

23-ம் தேதி வரவேற்பு

அசின்-ராகுல் திருமண வரவேற்பு வருகிற 23-ந் தேதி மும்பையில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ளும்படி தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகைச் சேர்ந்தவர்களுக்கு அசின் அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

 

 

English summary
Actress Asin - Industrialist Rahul Sharma marriage was held at Mumbai on Tuesday. Both the couple will host a grand party today at Sonali Farm House, Delhi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos