» 

நயன்தாரா காட்சியில் பிரபு தேவாவின் 'ஊத்திக்கினு கடிச்சிக்கவா' பாட்டு வந்தது ஏன்?

Posted by:

ராஜா ராணி படத்தில் நயன்தாரா தோன்றும் காட்சியில் சிம்பு, பிரபு தேவா தொடர்பான பாடல்கள் இடம்பெற்றது தற்செயலானதுதான் என்று படத்தின் இயக்குநர் அட்லீ கூறியுள்ளார்.

சிம்பு - நயன்தாரா, பிரபு தேவா - நயன்தாரா காதல் பின்னணிகள் ரசிகர்களுக்கு தெரியாததல்ல.

டிஆர், பிரபுதேவா பாட்டு

சமீபத்தில் ஆர்யா - நயன்தாரா நடித்து வெளியாகியுள்ள ராஜா ராணி படத்தின் ஒரு காட்சியில் நயன்தாரா காதல் தோல்வியில் அழுவார். அப்போது சிம்புவின் தந்தை டிஆர் பாடும் தட்டிப் பார்த்தேன் கொட்டாங்கச்சி மற்றும் பிரபு தேவாவின் ஊத்திக்கினு கடிச்சிக்கலாம் பாடல்கள் இடம்பெறுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றே வைத்த காட்சியா?

சிம்பு, பிரபு தேவாவுடன் நயன்தாராவுக்கிருந்த காதலை மனதில் வைத்து இந்தக் காட்சியை இயக்குநர் அட்லீ உருவாக்கியிருந்ததாகக் கூறப்பட்டது.

இயக்குநர் விளக்கம்

படத்தின் வெற்றி விழா பிரஸ் மீட்டில் இயக்குநர் அட்லீயிடம் இதுகுறித்துக் கேட்டபோது, அதை அவர் மறுத்தார். இது தற்செயலானதுதான் என்றார்.

ஒன்றி நடித்தார் நயன்...

அவர் கூறுகையில், "நயன்தாராவின் காதல் தோல்விக்கும் அவர் நடித்ததற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அந்த கதாபாத்திரத்தில் நடிக்க நல்ல அழகும், பக்குவமும் கொண்ட நடிகை தேவைப்பட்டார். நயன்தாரா மிகப் பொருத்தமாக இருந்தார்.

See next photo feature article

காதல் தோல்வியும் காரணமாக இருக்கலாம்

யாருக்குத் தெரியும்... இந்த அளவிற்கு கதாபாத்திரத்தோடு ஒன்றி அழுத்தமாக நடிக்க அவரது காதல் தோல்வியும் காரணமாக இருக்கலாம். ஆனால் டிஆர் மற்றும் பிரபுதேவாவின் பாடல் ஒளிபரப்பானதெல்லாம் எதேர்ச்சையாக நடந்த ஒன்று," என்றார்.

Read more about: nayanthara, atlee, raja rani, prabhu deva, பிரபு தேவா, நயன்தாரா, ராஜா ராணி
English summary
Raja Rani director Atlee says that he wasn't insert Prabhu Deva song in Raja Rani with any intention.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos