twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயம் ரவி சொல்றதுலயும் ஒரு அர்த்தம் இருக்கத்தாங்க செய்யுது...

    |

    சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் புகைப்படங்களை சமூகவலைதளப் பக்கங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் என நடிகர் ஜெயம் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    ஜெயம் ரவியின் இந்த கோரிக்கையை சற்று ஆழ்ந்து ஆராய்ந்தால் அதில் எவ்வளவு உண்மை பொதிந்துள்ளது என்பது தெரிய வரும்.

    தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பாலோனோர் கடந்த வாரம் வரை மற்றவர்களுக்கு, தங்களால் இயன்றவரை உதவி செய்யக்கூடிய வசதி படைத்தவர்களே.

    காலத்தின் கொடுமை...

    காலத்தின் கொடுமை...

    ஆனால், காலத்தின் கொடுமையால் கனமழை அவர்களது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டுள்ளது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள உடுத்திய உடையோடு வீட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு அடுத்தவர்களின் கையை எதிர்பார்க்கும் பரிதாப நிலை.

    தன்மானத்தில் தலையை விற்று...

    தன்மானத்தில் தலையை விற்று...

    நிவாரண உதவி பெறுபவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாக அதனைப் பெறுவதில்லை. உள்ளுக்குள் அழுதபடி, தன்மானத்தை சற்று தள்ளி வைத்து விட்டே அதனைப் பெறுகின்றனர்.

    ஆறாத வடு...

    ஆறாத வடு...

    இந்த சூழ்நிலையில் உதவி பெறுபவர்களின் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் போடுவது காலத்திற்கும் அவர்களது மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    நல்ல காரணங்களுக்காகவும்...

    நல்ல காரணங்களுக்காகவும்...

    பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது போன்ற புகைப்படங்களைப் போடுபவர்கள் அனைவருமே தற்பெருமைக்காக, விளம்பரத்திற்காக மட்டும் அவ்வாறு செய்வதில்லை. தங்களைப் பார்த்தாவது மேலும் பலர் இது போன்ற உதவிகளைச் செய்தால் நலம் என்ற நல்லெண்ணமும் அதில் மறைந்திருக்கிறது. ஆனால், முடிந்தவரை உதவி பெறுபவர்களின் முகங்களை மட்டுமாவது புகைப்படத்தில் மாஸ்க் செய்து வெளியிடலாம்.

    உடைந்து போன வைராக்கியம்...

    உடைந்து போன வைராக்கியம்...

    ஏனெனில் நிவாரண முகாம்களில் பழைய மற்றும் புதிய புடவைகளை மற்றவர்களிடமிருந்து உதவியாக பெறும் பெண்களில் பலர், கட்டினால் கணவர் வாங்கித் தரும் புடவைகளைத் தான் கட்டுவேன் என மனதார உறுதி கொண்டவர்களாகவும் இருக்கலாம்.

    கேள்விக்குறியான எதிர்காலம்...

    கேள்விக்குறியான எதிர்காலம்...

    இதேபோல், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக என சொந்த வீடு கட்டி, நகைகள் சேர்த்து வைத்து, புத்தாடைகளாக அணிய வைத்து அழகு பார்த்த பல பெற்றோர், தங்கள் கண்களுக்கெதிராகவே அவர்கள் கையேந்தி நிற்பதைக் கண்டு உடைந்து போயுள்ளனர்.

    உடைந்து போகும் பெற்றோர்...

    உடைந்து போகும் பெற்றோர்...

    இந்த சூழ்நிலையில் அவர்களின் தட்டில் உணவோடு பாவப்பட்ட நிலையில் இருக்கும் புகைப்படங்களை ஊடகங்களில் பார்த்தால் எவ்வளவு பதறிப் போவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

    ப்ளீஸ், யோசிக்கலாமே...

    ப்ளீஸ், யோசிக்கலாமே...

    எனவே, முடிந்தவரை மற்றவர்களின் பரிதாபத்தைப் பெற வேண்டும் என்ற நோக்கிலோ, அல்லது உதவியை தம்பட்டம் அடிக்கும் காரணத்திற்காகவோ இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவதை உதவி செய்வோர் குறைத்துக் கொள்ளலாம்.

    English summary
    As the people are feeling shy to get the relief things like food, water, etc.. they us except the donors to avoid taking photos and videos.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X