twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லைகா பெயரை பத்திரிகை விளம்பரங்களில் தூக்கி விடுகிறோம்: போலீஸ் கமிஷனரிடம் ஒப்புதல்

    By Shankar
    |

    'கத்தி' படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், பத்திரிகை விளம்பரங்களில் லைகா பெயரை தூக்கிவிடுகிறோம் என்று சென்னை மாநகர காவல் ஆணையரிடம் தயாரிப்பாளர் கருணாமூர்த்தி மனு கொடுத்தார்.

    லைகா நிறுவனம் தயாரித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது.

    ஆனால் லைகா நிறுவனத்தின் பெயரோடு வெளியிடுவதை கடுமையாக எதிர்த்தனர் தமிழ் அமைப்புகள் மற்றும் கட்சிகள்.

    இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு சுபாஷ்கரன் நெருக்கமாக இருக்கிறார், இலங்கை ஏர்லைன்சுடன் கூட்டாளியாக உள்ளார் என்று குற்றம்சாட்டின.

    Ayngaran Karuna requests police protection for Theaters releasing Kaththi

    எதிர்ப்பை மீறி ‘கத்தி' படத்தை நாளை மறுநாள் (22-ந்தேதி) தீபாவளியன்று ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. இந்த நிலையில்தான் சத்யம், உட்லண்ட்ஸ் அரங்குகள் அடித்து நொறுக்கப்பட்டன.

    இன்று வெளியான கத்தி விளம்பரங்களில் லைகா நிறுவனப் பெயர் நீக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சமாதானமடையாத போராட்டக்காரர்கள், தாங்கள் கத்தி தயாரிப்பாளர்களுடன் சமரசமாகவில்லை என்று அறிவித்துள்ளனர்.

    எனவே இந்தப் படத்துக்கான புக்கிங்கை இந்த நிமிடம் வரை நிறுத்தி வைத்துள்ளன தமிழக திரையரங்குகள். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் எந்தப் பிரச்சினையுமின்றி கத்தி வெளியாகிறது.

    இதற்கிடையில் ‘கத்தி' படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணாமூர்த்தி சென்னை கமிஷனரிடம் ‘கத்தி' படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி மனு கொடுத்துள்ளார். இது 20ம்தேதியிட்ட மனுவாகும்.

    அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து, படத்தின் டிஜிட்டல் பிரிண்ட்டில் லைகா பெயரை நீக்க சம்மதிக்கிறோம். 21ம்தேதி முதல், தினத்தந்தி, தினகரன் பத்திரிகைகளிலும் கத்தி பட விளம்பரத்திலுள்ள லைகா பெயர் நீக்கப்படும். இந்து பத்திரிகையில் மட்டும் நேரக்குறைவு காரணமாக லைகா பெயரை நீக்க முடியவில்லை. அதையும் தீபாவளி நாள் முதல் நீக்கிவிடுகிறோம் என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Ayngaran movies Karunamoorthy has requested the Commissioner of Chennai to give protection to theaters those screening Kaththi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X