»   »  தயவு செய்து கைபேசியை எடுத்து வராதீர்கள்.. பாகுபலி இயக்குநரின் அன்பான 'அட்வைஸ்' இது!

தயவு செய்து கைபேசியை எடுத்து வராதீர்கள்.. பாகுபலி இயக்குநரின் அன்பான 'அட்வைஸ்' இது!

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: படப்பிடிப்புத் தளத்திற்கு யாரும் கைபேசி கொண்டு வரக்கூடாது என்று பாகுபலி 2 படத்தின் இயக்குநர் ராஜமௌலி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Select City
Buy Baahubali 2: The Conclusion (Malayalam) (U/A) Tickets

பாகுபலி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பாகுபலி 2 படத்திற்கான வேலைகளில் படக்குழுவினர் மும்முரமாக இறங்கி இருக்கின்றனர்.


Baahubali 2 Commandments

அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் ராஜமௌலி படப்பிடிப்புத் தளத்தில் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார் என்று கூறுகின்றனர்.


அதிலும் படக்குழுவினர் யாரும் படப்பிடிப்புக்கு உள்ளே கைபேசி கொண்டுவரக் கூடாது என்று கண்டிப்பாக கூறியிருக்கிறாராம்.அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கும் முன்னரே தகவல்கள் வெளியே கசிந்துவிடக் கூடாது என்பதுதான் இந்த உத்தரவுக்குக் காரணம் என்று கூறுகிறார்கள்.


ஒரு சிறு புகைப்படம் கூட படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியே போய்விடக் கூடாது என்பதற்காக இதற்கென்று தனியே பாதுகாப்பு வீரர்களையும் நியமித்து இருக்கிறாராம்.


கொஞ்சம் கண் அசந்தால் முழுப்படத்தையும் ஆன்லைனில் ஏற்றி விடும் நபர்களுக்கு மத்தியில் இந்த மாதிரி கட்டுப்பாடுகள் அவசியம் தான்.

English summary
Baahubali 2 Director Rajamouli Strictly says "Mobile Phones not Allowed in Shooting spot".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos