»   »  பிரபாஸ் பர்த்டே ஸ்பெஷல்... “பாகுபலி 2” பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ராஜமௌலி!#baahubali2

பிரபாஸ் பர்த்டே ஸ்பெஷல்... “பாகுபலி 2” பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட ராஜமௌலி!#baahubali2

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்ற கேள்வியோடு, பலத்த எதிர்பார்ப்போடு மக்கள் காத்துக் கொண்டிருக்கும் பாகுபலி 2-ன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன் என பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து பிரமாண்டமாக உருவான படம் பாகுபலி. இப்படம் உலகளவில் நல்ல வரவேற்பினையும், வசூல் சாதனையையும் பெற்றது.

தற்போது இப்படத்தின் இரண்டாம் பாக வேலைகள் படுமும்முரமாக நடைபெற்று வருகின்றன.

2017 ஏப்ரல் ரிலீஸ்...

முதல் பாகத்தைவிட இரண்டாம் பாகத்தை மேலும் பிரமாண்டமாக ராஜமௌலி உருவாக்கி வருகிறார். அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இப்படம் ரிலீசாக இருக்கிறது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்...

இந்நிலையில், நேற்று மும்பையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பாகுபலி பட நாயகன் பிரபாஸின் பிறந்தநாள் நேற்று என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிட்டரில் டிரெண்டானது...

இந்தப் போஸ்டரில் பாகுபலியில் பிரபாஸ் நடித்துள்ள இரண்டு கதாபாத்திரங்களும் இடம் பெற்றுள்ளன. இதனை டிவிட்டர் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர் பாகுபலி ரசிகர்கள்.

எதிர்பார்ப்பு...

முதல் பாகத்தை விட இந்தப் படம் வசூலில் பெரும் சாதனைகளை நிகழ்த்தும் என பாக்ஸ் ஆபீஸ் கணித்துள்ளது. முதல் பாகத்தைப் போலவே, 2-ம் பாகமும் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் நேரடிப் படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Filmmaker S.S. Rajamouli revealed the first look from Baahubali: The Conclusion at Mumbai Film Festival on Saturday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos