twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரூ. 4,000க்கு விற்கும் 'பாகுபலி 2' டிக்கெட்: வங்கிக் கடன் கேட்கும் ரசிகர்கள்

    By Siva
    |

    ஹைதராபாத்: ஆந்திரா, தெலுங்கானாவில் பாகுபலி 2 பட டிக்கெட் விலையை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    வெற்றி இயக்குனர் ராஜமவுலியின் பாகுபலி 2 படம் இன்று உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் 6, 500 தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது.

    தமிழகத்தில் மட்டும் காலை 11.30 மணிக்கு தான் படம் ரிலீஸாகிறது.

    டிக்கெட்

    டிக்கெட்

    ஆந்திரா, தெலுங்கானாவில் அனைவரும் பாகுபலி 2 காய்ச்சல் பிடித்து திரிகிறார்கள். ஆன்லைனில் ஒரு வாரத்திற்கு டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிட்டது.

    தியேட்டர்கள்

    தியேட்டர்கள்

    தியேட்டர்களில் பாகுபலி 2 டிக்கெட்டை வாங்க மைல் கணக்கில் ரசிகர்கள் வரிசையில் நிற்கிறார்கள். கால் வலித்தாலும் பரவாயில்லை டிக்கெட் வாங்கி படத்தை பார்த்துவிட வேண்டும் என்று உள்ளனர்.

    டிக்கெட் விலை

    டிக்கெட் விலை

    ஆந்திரா, தெலுங்கானாவில் பாகுபலி 2 பட டிக்கெட் விலை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. சில இடங்களில் டிக்கெட்டுகள் ரூ.3000, ரூ. 4000க்கு விற்பனையாவதாக புகார்கள் எழுந்துள்ளன.

    வங்கிக் கடன்

    பாகுபலி 2 பட டிக்கெட் வாங்க வங்கிகள் கடன் அளித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Baahubali 2 ticket prices have shocked the fans of Telangana and Andhra.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X