»   »  கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி: பிரான்ஸுக்கு பறக்கும் ராஜமவுலி

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி: பிரான்ஸுக்கு பறக்கும் ராஜமவுலி

Posted by:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: வசூலில் கில்லியான பாகுபலி படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.

பிரான்ஸில் உள்ள கேன்ஸில் ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா நாளை துவங்கி வரும் 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் உலக திரைப்பட பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில் வசூல் மன்னன் பாகுபலி அணிக்கும் ஒரு பெருமை கிடைத்துள்ளது.

கேன்ஸ்

கேன்ஸ் திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்ட சில படங்களை மட்டுமே திரையிடுவார்கள். அந்த திரைப்பட விழாவில் ஒரு படம் திரையிடப்படுவது அந்த படக்குழுவினருக்கு கிடைத்த கௌரவமாக கருதப்படுகிறது.

பாகுபலி

இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் வசூலை அள்ளிக் குவித்த ராஜமவுலியின் பாகுபலி படம் திரையிடப்படுகிறது. பாகுபலி வரும் 16ம் தேதி இரவு 8.30 மணிக்கு திரையிடப்படுகிறது.

ராஜமவுலி

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாகுபலி படத்தின் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி, தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா ஆகியோர் பிரான்ஸ் செல்கிறார்கள். அங்கு வி.ஆர்.(virtual relaity)குறித்து நடக்கும் கலந்தாய்வில் ராஜமவுலி கலந்து கொள்கிறார்.

ஐஸ்வர்யா, சோனம்

கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், சோனம் கபூர் ஆகியோர் ஏற்கனவே பிரான்ஸ் கிளம்பிச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
SS Rajamouli's Baahubali will be screened at the prestigious Cannes film festival on may 16th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos