Don't Miss!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Finance அமெரிக்காவுக்கு பிறக்கும் இந்திய நகை கடைகள்.. சின்ன கல்லு பெத்த லாபம்..!!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
பாகுபலி 2 விற்காக அடித்துக் கொள்ளும் ஐரோப்பிய நாடுகள்
ஹைதராபாத்: இயக்குநர் ராஜமௌலியின் பாகுபலி 2 விநியோக உரிமையைக் கைப்பற்றிட ஐரோப்பிய விநியோகஸ்தர்களிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
கடந்த ஜூலை மாதம் 10 ம்தேதி வெளியான பாகுபலி திரைப்படம் உலகளவில் மாபெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. மேலும் இந்தியளவில் அதிக வசூல் செய்த 3 வது திரைப்படம் என்ற பெருமையையும் பாகுபலி தக்கவைத்துக் கொண்டது.
படம் வெளியாகி 5 மாதங்கள் தாண்டிய நிலையில் தற்போது பாகுபலி 2வின் ஐரோப்பிய விநியோக உரிமையைக் கைப்பற்றிட அங்குள்ள விநியோகஸ்தர்களிடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது.
ஐரோப்பியத் தயாரிப்பாளரும், விநியோகஸ்தர்களில் ஒருவருமான பியர் அஸ்ஸாலின் இது குறித்து கூறும்போது " முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியப் படங்களின் மதிப்பானது ஐரோப்பிய சந்தைகளில் உயர்ந்திருக்கிறது.
நிறைய விநியோகஸ்தர்கள் பாகுபலி 2 படத்தின் உரிமைக்காக போட்டி போடுகின்றனர் இது சந்தோஷமாக இருக்கிறது என்று தற்போதைய நிலவரத்தைத் தெரிவித்திருக்கிறார்.
இன்டிவுட் பிலிம் மார்க்கெட்டைச் ( வெளிநாட்டுப் படங்களை நம்ம ஊரிலும், நம்ம ஊர் படங்களை வெளிநாட்டிலும் விற்பனை செய்யும் இடம்) சேர்ந்த ஒருவர் இதுகுறித்து கூறும்போது " இந்தியப் படங்களுக்கு இது சரியான ஒரு சமயம், எனக்கு நம்பிக்கை இருக்கிறது இந்தியப் படங்கள் வெளிநாடுகளில் நன்றாக ஓடும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இலத்தீன், அமெரிக்கா மற்றும் சைனா போன்ற நாடுகளில் பாகுபலி 2 படத்தின் விநியோக உரிமைகள் ஏற்கனவே பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது.
எல்லாவற்றிற்கும் மேலாக ஹவாய் மற்றும் ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் நவம்பர் 15ம் தேதி பாகுபலி திரைப்படமானது மாலை 5.45 மணியளவில் திரையிடப்பட்டிருக்கிறது.
திறமை மட்டுமல்ல அதிர்ஷ்டமும் பாகுபலி குழுவினருக்கு அளவுக்கதிகமாகவே கைகொடுக்கிறது!