»   »  அஜீத்தின் வேதாளம் படத்தில் நடிக்க மறுத்த சிறுத்தை சிவாவின் தம்பி

அஜீத்தின் வேதாளம் படத்தில் நடிக்க மறுத்த சிறுத்தை சிவாவின் தம்பி

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வேதாளம் படத்தில் அஜீத்துடன் நடிக்க இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும், நடிகருமான பாலா மறுத்துவிட்டாராம்.

Select City
Buy Vedalam (U) Tickets

அன்பு படம் மூலம் ஹீரோவானவர் இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பி. அதன் பிறகு மலையாள திரையுலகம் பக்கம் சென்ற அவர் கிட்டத்தட்ட அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் தான் அவர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடித்தார்.


Bala refuses to act in Ajith's Vedhalam

மலையாள படங்களில் நடித்த பாலாவை அவரது அண்ணன் சிவா அஜீத்தின் வீரம் படத்தில் நடிக்க வைத்தார். அஜீத்தின் தம்பிகளில் ஒருவராக பாலா நடித்தார். இந்நிலையில் சிவா அஜீத்தை வைத்து வேதாளம் படத்தை இயக்கியுள்ளார்.


Bala refuses to act in Ajith's Vedhalam

வேதாளம் படத்திலும் நடிக்குமாறு சிவா தனது தம்பியை கேட்டுள்ளார். ஆனால் அவரோ நடிக்க மறுத்துவிட்டாராம். மலையாள படங்களில் அவர் பிசியாக இருப்பதால் தான் அஜீத் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.


மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்கையில் அந்த வாய்ப்புகளை விட்டுவிட்டு வேதாளத்தில் நடிக்க அவர் விரும்பவில்லையாம்.

English summary
Buzz is that Bala has refused to act in Ajith starrer Vedhalam directed by Siruthai Siva.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos