»   »  சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் குப் குப் என "ரயில்" விட்ட பாலகிருஷ்ணா...!

சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் குப் குப் என "ரயில்" விட்ட பாலகிருஷ்ணா...!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இருபுறமும் நடிகர்கள் அமர்ந்திருக்க நடுவில் அமர்ந்து ஜாலியாக சிகரெட் ஊதியிருக்கிறார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா .

நடிகர் சங்கத்தின் நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி கடந்த வாரம் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாகார்ஜுனா, நிவின் பாலி, பாலகிருஷ்ணா உள்ளிட்ட நடிகர்கள் கலந்து கொண்டனர். மைதானத்தில் வெயில் அதிகமாக இருந்ததால் நடிக, நடிகையர் பலரும் சமாளிக்க முடியாமல் திணறினர்.

Balakrishna Smoking in Chepauk Stadium

இதில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா வெயிலால் பனியனுடன் அமர்ந்து போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அடுத்து அவர் செய்த செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி விட்டது.

இருபுறமும் நெருக்கமாக விஜயகுமார், சிவராஜ்குமார் அமர்ந்திருக்க, நடுவில் அமர்ந்திருந்த பாலகிருஷ்ணா ஜாலியாக சிகரெட் பிடிக்க ஆரம்பித்தார்.

சற்றுத்தள்ளி தமன்னா, ஜனனி ஐயர் போன்ற நடிகைகளும் அமர்ந்திருந்தனர். ஆனால் அருகில் மற்றவர்கள் இருக்கிறார்களே என்ற எந்த நெருடலுமின்றி பாலகிருஷ்ணா புகைபிடித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பாலகிருஷ்ணா ஒரு எம்எல்ஏ வாக இருந்து கொண்டு பொது இடத்தில் இப்படிப் புகைபிடிக்கலாமா? என சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

ஐபிஎல் போட்டிகளின் போது கிரிக்கெட் மைதானத்தில் சிகரெட் பிடித்ததாக, நடிகர் ஷாரூக்கானுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

English summary
Star Cricket:Telugu Actor Balakrishna Smoking in Chepauk Stadium. Now This Action has been Subjected to Criticism
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos