twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூணே மூணு வார்த்தை சொல்லுங்க… வாய்ப்பை அள்ளுங்க

    By Mayura Akilan
    |

    திருடன் போலீஸ்' படத்தின் வெற்றியை தொடர்ந்து எஸ்.பி.பி.சரண் தனது ‘கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்திற்கு ‘மூணே மூணு வார்த்தை' என்று பெயர் சூட்டியுள்ளார்.

    ‘வல்லமை தாராயோ', ‘கொல கொலயா முந்திரிக்கா' ஆகிய படங்களை இயக்கிய மதுமிதா இந்த படத்தை இயக்குகிறார்.

    எஸ்.பி.பி.சரண் தயாரித்த அத்தனை படங்களையும் புதுமுக இயக்குனர்களே இயக்கியிருந்தார்கள். ஆனால் இப்படத்தை ஏற்கெனவே இரண்டு படங்களை இயக்கிய மதுமிதாவிடம் இயக்கும் பொறுப்பை வழங்கியுள்ளார் சரண்.

    மூணே மூணு வார்த்தை

    மூணே மூணு வார்த்தை

    வாழ்க்கையில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே முடிவு செய்ய வேண்டும் என இளைஞர்கள் நினைக்கும் காலம் இது. தங்களது திறமையை இவ்வுலகிற்கு நிரூபிக்க முற்படும் இரண்டு இளைஞர்களை மையமாகக்கொண்ட கதைதான் ‘மூணே மூணு வார்த்தை' என்கிறார் இயக்குநர் மதுமிதா.

    காமெடி படம்

    காமெடி படம்

    பெரியதாக சாதிக்க என்னும் இரு இளைஞர்கள், அவர்கள் எடுத்து வைக்கும் முதல்படி அதைத் தொடர்ந்து அவர்கள் சந்திக்கும் நிகழ்வுகளை இளைஞர்களைக் கவரும் வகையில் காமெடியோடு சொல்லியிருக்கிறாராம்.

    வெங்கி அதிதி

    வெங்கி அதிதி

    இப்படத்தில் எதையும் பெரிதாக நினைக்காத, சோம்பேறித்தனத்தின் உருவாக அர்ஜுன் மற்றும் ‘சுட்டகதை' புகழ் வெங்கி, அதிதி என இளமை பட்டாளத்துடன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சார், லக்ஷ்மி மேடம், கே.பாக்யராஜ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

    முதன் முதலில்...

    முதன் முதலில்...

    எஸ்.பி.பி, லக்ஷ்மி தமிழில் இணையும் முதல் படம் இது. சுருக்கமாக மூன்று வார்த்தைல சொல்லனும்னா படம் உங்களை மகிழ்விக்கும், "என்கிறார் மதுமிதா.

    தாத்தா - பாட்டி

    தாத்தா - பாட்டி

    எஸ்.பி.பியும், லட்சுமியும் அப்பா, அம்மா கேரக்டரில் நடிக்க இருந்தனர். இரண்டு பேரும் வயதான தம்பதிகளாக தெலுங்கில் நடித்த ‘மிதுனம்' படம் ஹிட்டானதால், இதிலும் தாத்தா, பாட்டியாக மாற்றிவிட்டேன்.

    பாக்யராஜ்

    பாக்யராஜ்

    தமிழில் கே.பாக்யராஜ் நடிக்கும் கேரக்டரில், தெலுங்கில் பிரம்மானந்தம் நடிக்கிறார்.மனித உறவுகளை மேம்படுத்தும் பல சொற்றொடர்கள் மூணே மூணு வார்த்தையாகத்தான் இருந்து வருகிறது என்பது நான் அறிந்த உண்மை. இதையே நான் தலைப்பாக வைத்திருக்கிறேன் என்கிறார் மதுமிதா.

    அனைவரும் புதுமுகம்

    அனைவரும் புதுமுகம்

    படத்தில் அனைத்துதொழில் நுட்பக் கலைஞர்களும் அறிமுகமே. இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இயக்கியது மிகவும் புதுமையான அனுபவமாய் இருந்தது.

    வீடியோ அனுப்புங்க

    வீடியோ அனுப்புங்க

    சமீபமாக, கல்லூரி மாணவர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் தங்களது கலை ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எங்கள் படத்தின் மூலம் அவர்கள் தங்களது ‘மூணே மூணு வார்த்தை' அனுபவத்தை வீடியோ பதிவாக அனுப்பினால், அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீடியோக்களை படத்தின் இறுதியில் காட்ட உள்ளோம்.

    சினிமாவில் வாய்ப்பு

    சினிமாவில் வாய்ப்பு

    இவ்வீடியோ அவர்களின் காதல், கல்லூரி, நட்பு, நகைச்சுவை என அவர்களுக்கு பிடித்த விஷயமாக இருக்கலாம். அவர்களுக்கு எங்களால் முடிந்தவரை திரையுலகில் வாய்ப்புகள் அமைத்துத் தரவும் தயாராக உள்ளோம் என்கிறார் இயக்குனர் மதுமிதா.

    English summary
    After impressing audiences and critics alike in Telugu drama "Mithunam", veteran actors S.P. Balasubrahmanyam and Lakshmi, will be seen together in upcoming Tamil film "Moondre Moondru Vaarthai".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X