twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலுக்கு புது அர்த்தம் சொன்ன மணிரத்னம்...

    By Mayura Akilan
    |

    தமிழ் சினிமாவின் காதலை மணிரத்னத்திற்கு முன் மணிரத்னத்திற்கு பின் என்று பிரித்து விடலாம். மணிரத்னம் படம் பார்த்துதான் காதலை தெரிந்து கொண்டோம் என்று சொன்னவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அந்த அளவிற்கு காதலை கவி நயத்தோடு சொன்னவர் மணிரத்னம் என்றால் மிகையாகாது.

    அளவான பேச்சு, அழகான மொழி, மௌனங்களின் அர்த்தம், பெண்மையின் தனித்துவம், காதலின் கவர்ச்சி ஆகியவற்றை புதிய வடிவில் இந்திய சினிமாவிற்கே அடையாளம் காட்டியவர் மணிரத்னம். 59வது பிறந்தநாள் கொண்டாடும் மணிரத்னம் இன்றைக்கும் இளைஞரைப்போலவே ஓ காதல் கண்மணியை இயக்கி இளைஞர்களிடம் பாரட்டுக்களையும், வாழ்த்துக்களையும் அள்ளிக்குவித்துள்ளார்.

    தமிழில் மணிரத்னம்

    தமிழில் மணிரத்னம்

    இவரது முதல் படம் 1983 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான பல்லவி அனு பல்லவி ஆகும். இவரது திரைக்கதைக்கு கேரளா அரசின் சிறந்த திரைக்கதையாளர் என்ற விருது கிடைத்தது. இவரது 3 வது படம் முரளி,ரேவதி நடித்த பகல் நிலவு தான் முதலாவது தமிழ் படம்.

    மணிரத்னம் படங்கள்

    மணிரத்னம் படங்கள்

    மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி இன்றைய இளசுகளை கவர்ந்துள்ளது என்றால் 80, 90களில் அவரது மௌன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், அஞ்சலி, தளபதி, ரோஜா, பம்பாய், அலைபாயுதே, உயிரே, என பல படங்களைப் பார்த்து ரசித்த ரசிகர்கள் இன்றைக்கும் அதைப்பற்றி பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

    கமல் – ரஜினி

    கமல் – ரஜினி

    ஆரம்பகாலத்தில் கீதாஞ்சலி, பகல் நிலவு, இதயக்கோவில், மௌனராகம் என திரையில் அமைதியின் அர்த்தத்தை படமாக்கியவர் மணிரத்னம். உலக நாயகனுடன் கைகோர்த்து இவர் இயக்கிய நாயகன் இன்றும் உலக அளவில் சிறந்த 100 படங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது. ரஜினியுடன் கை கோர்த்த தளபதி இன்றைக்கும் பேசப்படும் படமாக உள்ளது.

    கதைகளின் நாயகன்

    கதைகளின் நாயகன்

    இந்தியாவையே அச்சுறுத்தும் தீவிரவாதத்தை பற்றி அனைவரும் பேச கூட தயங்கிய போது, ரோஜா, உயிரே என தன் அடுத்தடுத்த படங்களின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியவர்.

    காதலின் நாயகன்

    காதலின் நாயகன்

    சமூக அக்கறை படங்களை மணிரத்னம் இயக்கியிருந்தாலும் காதல் தான் அவரின் எப்போதும் ஃபேவரட், 10 வருடங்களுக்கு பிறகு வரும் ஜெனரேஷன் காதலை 2000ம் ஆண்டே அலைப்பாயுதே மூலம் சொல்லி இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

    ஓ காதல் கண்மணி

    ஓ காதல் கண்மணி

    பல தோல்வி படங்களைக் கொடுத்த மணிரத்னம் ரிட்டர்ன் ஆப் கிங்காக 59வது வயதில் ஓ காதல் கண்மணி மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

    குவியும் வாழ்த்துக்கள்

    மணிரத்னத்திற்கு சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. மணிரத்னம் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகை குஷ்பு ஃபேவரைட் இயக்குநருக்கு ட்விட்டரில் வாழ்த்தினை பதிவிட்டுள்ளார்.

    English summary
    ManiRatnam, who has been pre-dominantly associated with south movies, has given an indelible contribution to kollywood films as well. We wish the great film maker a very happy 59th birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X