»   »  யூ எஸ் பாக்ஸ் ஆபீஸில் பாகுபலி, தமிழ் படங்களையே ஓரம்கட்டிய கன்னட திரைப்படம்

யூ எஸ் பாக்ஸ் ஆபீஸில் பாகுபலி, தமிழ் படங்களையே ஓரம்கட்டிய கன்னட திரைப்படம்

Posted by:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட திரையுலகினர் பெருமைப்படும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது, அதாவது கடந்த வாரம் அமெரிக்காவில் வெளியான ரங்கிதரங்கா என்ற கன்னடப் படம் ஹிந்தி மற்றும் தமிழ் படங்கள் அனைத்தையும் ஓரங்கட்டி பாக்ஸ் ஆபிசில் முன்னிலை வகிக்கிறது.

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்கள் அதிக பொருட்செலவில் உருவாகின்றன, மலையாளப் படங்கள் குறைந்த செலவில் எடுக்கப் பட்டாலும் அதிக சினிமாக்கள் அங்கு உருவாகின்றன.

கன்னடப் படங்களை பொறுத்தவரை ஒருசில முயற்சிகளே அங்கு மேற்கொள்ளப் படுகின்றன, எனவே தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரை கன்னடப் படங்களின் வெளியீடு மற்றும் பிறமொழிப் படங்களுடன் போட்டி போன்றவை குறைவாகவே உள்ளன.

ரங்கிதரங்கா முதல்முறையாக இந்த வட்டத்தை விட்டு வெளியில் வந்துள்ளது, படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பற்றி பார்க்கலாம்.

ரங்கிதரங்கா

புதுமுகங்கள் நிரூப் பண்டாரி, அவந்திகா ஷெட்டி, ராதிகா சேத்தன் மற்றும் சீனியர் நடிகர் சாய்குமார் ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் கன்னட திரைப்படம் ரங்கிதரங்கா. அனுப் பண்டாரி திரைக்கதை எழுதி படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு நாவலாசிரியரின் வாழ்வில் நடக்கும் த்ரில்லர் சம்பவங்களின் தொகுப்பே ரங்கிதரங்கா.

 

 

கடந்த மாதம் கன்னடத்தில்

கடந்த ஜூலை மாதம் 3 ம் தேதி கன்னட மொழியில் படம் வெளியானது, வெளியான 25 நாட்களுக்குள்ளேயே சுமார் 20 கோடிகளை வசூலித்து தென்னிந்திய திரையுலகத்தினரையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது படம்.

யூ எஸ்ஸிலும் பட்டையைக் கிளப்பும் ரங்கிதரங்கா

படத்தின் மாபெரும் வெற்றியைப் பார்த்த படக்குழுவினர் யூ எஸ்ஸிலும் படத்தை கடந்த 13 ம் தேதி (ஆகஸ்ட் மாதம் ) வெளியிட்டனர். யூ எஸ் பாக்ஸ் ஆபிசில் பெரும் புயலையே வசூலில் உண்டாக்கி இருக்கிறது படம். தமிழ் மற்றும் ஹிந்தித் திரைப்படங்களை எல்லாம் ஓரங்கட்டி தொடர்ந்து வசூலில் பூகம்பத்தை நிகழ்த்தி வருகிறது ரங்கிதரங்கா.

5 நாட்களில் 1 கோடிக்கும் மேலே

வெளியான 5 நாட்களுக்குள்ளேயே சுமார் 1 கோடியே 30 லட்சங்களை வசூலித்து இருக்கிறது படம், 31 காட்சிகல் மட்டுமே ஓடி இந்த சாதனையைப் புரிந்து இருக்கிறது இந்த கன்னட திரைப்படம்.

முன்னணி நடிகர்களின் படங்கள்

உலகம் முழுவதும் மாபெரும் வசூல் செய்த பாகுபலி மற்றும் பஜ்ரங்கி பைஜான் 2 திரைப்படங்களையும் வசூலில் வீழ்த்தி இருக்கிறது ரங்கிதரங்கா. சல்மான் படம் 53 காட்சிகள் திரையிடப்பட்டு 61.36 லட்சங்களை வசூலித்து இருக்கிறது. ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம் 20 லட்சங்களை மட்டுமே வசூலித்து இருக்கிறது.

தமிழ்ப் படங்களையும் விட்டு வைக்கவில்லை

சமீபத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான வாலு மற்றும் ஆர்யாவின் நடிப்பில் வெளியான வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க போன்ற படங்களையும் விட்டு வைக்கவில்லை இந்தப் படம். ஆர்யாவின் படம் 42 லட்சங்களை 52 காட்சிகளை வசூலித்து இருக்கிறது, சிம்புவின் வாலு 30 காட்சிகள் ஓடி 19 லட்சங்களை வசூலித்து இருக்கிறது.

பிரதர்சிடம் வீழ்ந்த ரங்கிதரங்கா

மற்ற அனைத்துப் படங்களையும் ஓரங்கட்டிய ரங்கிதரங்கா அக்சய் குமாரின் நடிப்பில் வெளிவந்த பிரதர்ஸ் திரைப்படத்திடம் வசூலில் வீழ்ந்து விட்டது. 164 காட்சிகள் ஓடி 1.73 கோடியை வசூலித்து இருக்கிறது பிரதர்ஸ், எனினும் ரங்கிதரங்கா வெறும் 30 காட்சிகள் மட்டுமே ஓடி இந்த வசூலைப் பெற்று இருப்பதால் இதனை வீழ்ச்சி என்று சொல்ல முடியாது.

இதுவரை எந்தக் கன்னடப் படமும்

சாண்டல்வுட்டில் கடந்த வருடம் வெளியான மிஸ்டர் அண்ட் மிசஸ் ராமாச்சாரி திரைப்படம் இதுவரை உலகளவில் அதிகம் வசூலித்த திரைப்படமாக திகழ்கிறது. அந்தப் படத்தைத் தொடர்ந்து ரங்கிதரங்கா இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. தற்போதைய நிலையில் இன்னும் 3 வாரங்கள் யூ எஸ்ஸில் நன்றாக ஓடக்கூடிய வாய்ப்பு ரங்கிதரங்காவிற்கு இருக்கிறதாம். அப்புறம் என்ன பட்டையைக் கிளப்ப வேண்டியதுதான்...

English summary
Box Office Collection: 'RangiTaranga' Creates History to Overpower 'Bajrangi Bhaijaan', 'Baahubali', 'Vaalu' but fails to Beat "Brothers in US.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos