»   »  சகலகலாவல்லவன், ஆரஞ்சு மிட்டாய், இது என்ன மாயம்.. நிலவரம் எப்படி?

சகலகலாவல்லவன், ஆரஞ்சு மிட்டாய், இது என்ன மாயம்.. நிலவரம் எப்படி?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த வெள்ளிக்கிழமை சகலகலாவல்லவன், ஆரஞ்சு மிட்டாய் மற்றும் இது என்ன மாயம் என்று 3 தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. 6 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில படங்கள் தள்ளிப் போனதால் 3 படங்கள் மட்டுமே வெளியாகின.

ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி மற்றும் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் சகலகலாவல்லவனும், விஜய் சேதுபதி மற்றும் ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பில் ஆரஞ்சு மிட்டாயும், விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இது என்ன மாயம் திரைப்படமும் வெளியாகி உள்ளது.


3 படங்களும் வெளியாகி இன்றோடு 3 நாட்கள் ஆகின்றன, படங்களின் வசூல் நிலவரம், மக்களின் வரவேற்பு போன்றவற்றை பற்றி இங்கு காணலாம்.


சகலகலாவல்லவன்

ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்த சகலகலாவல்லவன் திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 325 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.


அரைத்த மாவு புளித்த தோசை

பழைய அரைத்த மாவில் சுட்ட புளிப்பு தோசைதான் சகலாவல்லவன். ஆனால் தனது அனுபவத்தால் அலங்காரம் செய்து சாப்பிடக் கூடியதாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் சுராஜ்.


காமெடியால் தப்பியது

காமெடி என்னும் மசாலாவை நன்றாகத் தூவி சகலகலாவல்லவனை வெற்றிப்படமாக மாற்றியிருக்கிறார் சுராஜ். காமெடிதான் படத்துக்குக் கை கொடுத்திருக்கிறது.


முன்னணியில்

வசூலிலும் சரி வரவேற்பிலும் சரி இரண்டிலுமே முன்னணியில் இருக்கிறது ஜெயம் ரவியின் சகலகலாவல்லவன். இதுவரை மொத்தம் சுமார் 5 கோடி வரை வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.


ஆரஞ்சு மிட்டாய்

விஜய் சேதுபதி நடித்து, தயாரிக்கவும் செய்திருக்கும் திரைப்படம் ஆரஞ்சு மிட்டாய். விஜய் சேதுபதியுடன் இணைந்து ரமேஷ் திலக், ஆறுமுகம் பாலா மற்றும் அர்ஷிதா ஆகியோர் நடித்து வெளிவந்திருக்கும் ஆரஞ்சு மிட்டாய் தமிழ்நாடு முழுவதும் சுமார் 175 திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.


சுவை சற்று குறைவுதான்

பிஜு விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்து இயக்கிய ஆரஞ்சு மிட்டாய், விஜய் சேதுபதியின் ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும் கூட திரைக்கதை மற்றும் காட்சியமைப்பில் கோட்டை விட்டுள்ளதாக கூறுகிறாரக்ள்.


வரவேற்பு ஓகே .. ஆனால் வசூல்...?

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த திரைப்படம் ஆரஞ்சு மிட்டாய். விஜய் சேதுபதியின் நடிப்பு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜய் சேதுபதி வழக்கம் போல அசத்தியுள்ளார். படத்திற்கு வரவேற்பும் ஓகே. ஆனால் வசூல் குறைவுதான் என்று சொல்கிறார்கள்.


இது என்ன மாயம்

விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் மற்றும் அம்பிகா, நாசர் என முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் இது என்ன மாயம். தமிழ்நாடு முழுவதும் சுமார் 175 திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கிறது.


அழகான ஜோடிதான்

இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இத்திரைப்படத்தில், விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஜோடிப் பொருத்தமும், அவர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரியும் அதிதமாக சிலாகிக்கப்படுகிறது.


வரவேற்பு எப்படி

ஆனால் படம் ரசிகர்களைக் கவரவில்லை என்று பேச்சு அடிபடுகிறது. 2001 ம் ஆண்டு வெளிவந்த சிரானோ ஏஜென்சி என்ற கொரியப் படத்தைப் பார்த்தால் இதைப் பார்க்க வேண்டிதில்லையாம்.. அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று தெரிந்து கொள்ளலாம்.


English summary
Sakalakala Vallavan, Orange Mittai,Idhu Enna Maayam - Box Office Round Up.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos