»   »  வசூலில்..ராஜமௌலியின் பாகுபலியை வீழ்த்தியது விஜய்யின் தெறி

வசூலில்..ராஜமௌலியின் பாகுபலியை வீழ்த்தியது விஜய்யின் தெறி

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல் வாரத்தில் 'பாகுபலி' படத்தின் சென்னை வசூலை முறியடித்து விஜய்யின் 'தெறி' சாதனை படைத்துள்ளது.

Select City
Buy Theri (U) Tickets

விஜய், சமந்தா, நைனிகா நடிப்பில் கடந்த வாரம் வெளியான 'தெறி' வசூலில் தொடர்ந்து சாதனைகள் படைத்து வருகிறது.


தமிழ்நாடு தவிர்த்து கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இப்படம் வசூலைக் குவித்து வருகிறது.


முதல் வாரம்

முதல் வாரம்

முதல் வார முடிவில் விஜய்யின் 'தெறி' ரூ 3.06 கோடிகளை சென்னையில் வசூலித்துள்ளது. தியேட்டர் பிரச்சினை இருந்தாலும் கூட இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் குறை வைக்கவில்லை. மேலும் போட்டிக்கு வேறு பெரிய படங்கள் இல்லாதது, விடுமுறை ஆகியவை தெறிக்கு பெரும்பலத்தைக் கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு தவிர கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களிலும் வேறு பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகவில்லை என்பதால் அங்கும் இப்படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.


பாகுபலி vs தெறி

பாகுபலி vs தெறி

சென்னையில் 3 கோடிகளை வசூல் செய்ததன் மூலம் 'பாகுபலி' படத்தின் முதல் வார வசூலை இப்படம் முறியடித்துள்ளது. தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியான 'பாகுபலி' முதல் வாரத்தில் 1.66 கோடிகளை சென்னையில் வசூலித்திருந்தது.


ஷாரூக்கான்

ஷாரூக்கான்

ஷாரூக்கான் நடிப்பில் வெளியான 'பேன்' திரைப்படம் ரூ 41.25 லட்சங்களையும், 2 வார முடிவில் 'தி ஜங்கிள் புக்' திரைப்படம் ரூ 1.66 கோடிகளையும் சென்னையில் வசூல் செய்துள்ளது.


தோழா

தோழா

எதிர்பார்த்தது போல தெறியின் வரவு 'தோழா' படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 4 வார முடிவில் 'தோழா' ரூ 3.71 கோடிகளை சென்னையில் வசூலித்துள்ளது.


வேறு புதிய படங்கள் வெளியாகும் வரை தியேட்டர்களில் தெறியின் ராஜ்ஜியம் தான் என்பதால், வசூலில் மேலும் பல புதிய சாதனைகளை இப்படம் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English summary
Box Office: Vijay' Theri Beats Baahubali Opening Weekend Record in Chennai.
Please Wait while comments are loading...