»   »  மூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் பாரதிராஜா... கமல் புகழாரம்! - வீடியோ

மூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் பாரதிராஜா... கமல் புகழாரம்! - வீடியோ

மூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் இயக்குநர் பாரதி ராஜா என உலகநாயகன் கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் இயக்குநர் பாரதி ராஜா என உலகநாயகன் கமல்ஹாசன் புகழாரம் சூட்டினார். பாரதி ராஜாவின் உண்மையான வயது தெரிந்தால் கையெடுத்து கும்பிடுபவர்கள் காலில் விழுந்து வணங்குவார்கள் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்திய திரைத்துரையின் பழம்பெரும் இயக்குனரான 'இயக்குனர் இமயம்' பாரதிராஜா சர்வதேச திரைப்பட கல்வி நிலையம் ஒன்றை துவங்கியுள்ளார். இதன் துவக்க விழாவில் நடிகர் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Brric opening ceremony function was held in Chennai

அப்போது பேசிய நடிகர் கமல்ஹாசன் மூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் பாரதிராஜா என புகழாரம் சூட்டினார். 16 வயதினிலே படப்பின் போது நடந்த சுவாரசிய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய பாரதிராஜா, தாய்ப்பாலுக்கு பிறகு நான் அதிகம் குடித்தது சினிமா பால் தான் என கூறினார். சினிமாவை தான் யாரிடமும் கற்றுக்கொள்ளவில்லை என்றும் அது என்னுள் இருந்த உணர்வு என்றும் அவர் கூறினார்.

பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது பாரதி ராஜாவின் உண்மையான வயது தெரிந்தால் அவரை கும்பிடுபவர்கள் காலில் விழுந்து வணங்குவீர்கள் என்றார். இந்த வயதிலும் அவர் இளமையாக இருப்பதற்கு அப்போதுள்ள உணவு முறையும் அவரது உழைப்பும் தான் காரணம் என்றும அவர் கூறினார்.

English summary
Bharathiraja has started a cinema institution Brric in Chennai. This opening ceremony function was held in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos