twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோயினுக்கு ரைஸ் பக்கெட் சவால் விட்ட பர்மா இயக்குநர்

    By Mayura Akilan
    |

    சென்னை: வட்டிக்குக் கடன் வாங்கி கார் வாங்குபவர்கள்,சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பர்மா. இந்தப்படத்தின் இயக்குநர் புதுவிதமாக ரைஸ் பக்கெட் சவால் விட்டுள்ளார்.

    ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் பர்மா.மைக்கேல், ரேஷ்மி மேனன், சம்பத், கனி உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை தரணீதரன் இயக்கியுள்ளார்.

    ஏ.ஆர்.ரகுமானின் இன்ஸ்டிடியூட் மாணவர் சுதர்சன் இசையமைத்துள்ளார். செப்டம்பர் 12-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலை 4 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது.

    அப்போது பர்மா படம் பற்றியும்,ஹீரோ, ஹீரோயின், தயாரிப்பாளர் பற்றியும் இயக்குனர் தரணீதரன் பேசினார்.

    கார் சேஸிங்

    கார் சேஸிங்

    இப்படம் கார் சேஸிங்கை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ் கொடுத்து பைனான்சில் கார் வாங்கும் சிலர் பின்னர் மாதந்தோறும் கட்ட வேண்டிய பைனான்ஸை கட்ட மறந்து விடுகிறார்கள். அல்லது சூழ்நிலை காரணமாக கட்ட முடியாமல் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை விரட்டி பிடித்து அந்த காரை சேஸ் பண்ணுவதுதான் இந்த படத்தின் கதை.

    நளனும் நந்தினியும் நாயகன்

    நளனும் நந்தினியும் நாயகன்

    அப்படியொரு கார் சேஸிங் வேடத்தில் நாயகன் மைக்கேல் நடிக்கிறார். இவர் நளனும் நந்தினியும் படத்தில் நாயகனாக நடித்தவர். மேலும், இந்த படத்துக்காக அவரை அழைத்தபோது ஷேவ் பண்ணி டிப்டாப்பாக வந்து நின்றார்.

    தாடி வளர்த்த ஹீரோ

    தாடி வளர்த்த ஹீரோ

    அப்போது அவரிடம், இந்த படத்தில் பர்மா என்ற கேரக்டரில் நடிக்கிறீர்கள். அந்த பர்மாவுக்கு தாடி, மீசையெல்லாம் இருக்கும். அதனால் ஒரு 3 மாதம் நீங்கள் தாடி வளர்க்க வேண்டும் என்று சொன்னேன். அதையடுத்து ஷேவ் பண்ணுவதை நிறுத்தி விட்டு 3 மாதங்களாக தாடி, மீசையை வளர்த்து விட்டு வந்து நடித்தார் மைக்கேல் என்று கூறினார்.

    வட சென்னை தாதா

    வட சென்னை தாதா

    பர்மா என்றால் ஊரை பற்றி கதை இல்லை. வட சென்னையில் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவரின் கதை. வட்டிக்கு கடன் வாங்கி கார் வாங்குபவர்கள் பணத்தை திருப்பி செலுத்தாத நிலையில் அந்த கார்களை வலுக்கட்டாயமாக பறித்துக்கொண்டு வருவதுதான் கதைக் கரு. இந்த வேலை செய்துகொண்டிருந்தவர் வட சென்னை பர்மா. அவரிடமிருந்து இப்படத்துக்கு டைட்டில் வைக்க முன் அனுமதி வாங்கிவிட்டோம்.

    புதுமையான கதை

    புதுமையான கதை

    இந்த படத்திற்கும், நாயகன் மைக்கேல் கேரக்டருக்கும் பர்மா என்று டைட்டில் வைத்தோம். கார் ஜப்தி பற்றி ஒரிஜினல் பர்மா சொன்ன விஷயங்கள் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது. தமிழ் சினிமாவுக்கு இதுவொரு புதுகளமாக இருக்கும் இது தமிழ் சினிமாவுக்கு ஒரு புதுமாதிரியான படமாக இருக்கும் என்றார்.

    ரைஸ் பக்கெட்

    ரைஸ் பக்கெட்

    இப்போது உலகம் முழுவதும் ஐஸ் குளியல் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. அதுபோல் இந்த மேடையில் ஹீரோயின் தலையில் ஐஸ்கொட்டினால் ஜில்லுனுதான் இருக்கும். ஆனால் தண்ணீரை வீணாக்க விரும்பவில்லை. அதற்கு பதில் ஏழைகளுக்கு பயன்படும் வகையில் ரைஸ் பக்கெட் சேலன்ஞ் செய்கிறோம். இங்கு வழங்கப்படும் அரிசி வசதி இல்லாதவருக்கு போய் சேர வேண்டும். இதை ஹீரோ, ஹீரோயின் செய்தால் நிறைய பேர் வயிறு நிரம்பும் என்று இயக்குனர் கூறினார்.

    செப்டம்பர் 12 ரிலீஸ்

    செப்டம்பர் 12 ரிலீஸ்

    முதலில் இதை முற்றிலும் புதுமுகங்களை வைத்து செய்ய விரும்பினோம். சம்பத், அதுல் குல்கர்னி முதலில் ஐடியா இல்லை. முடிந்தால் செய்யலாம் என்றிருந்தேன்.தயாரிப்பாளரும் செய்யலாம் என்றார். அவர்களைச் சேர்த்ததால் நட்சத்திர பலமுள்ள படமாக மாற்றிக் கொண்டோம். அவர்களிடம் நடிக்கக் கேட்ட போது கூட இதே பவர்பாயிண்ட் பிரசன்டேஷனை மெயில் செய்தேன். ஓகே சொன்னார்கள். 33 நாட்களில் படம் முடிந்து விட்டது. செப்டம்பர் 12ல் படம் ரிலீஸ் ஆகிறது என்றார்.

    English summary
    Burma Tamil Movie Audio Launch on Auguest 28 in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X