»   »  டிரெய்லர் செம 'மாஸ்+ கிளாஸ்'... விஜய்யைப் பாராட்டும் நட்சத்திரங்கள்

டிரெய்லர் செம 'மாஸ்+ கிளாஸ்'... விஜய்யைப் பாராட்டும் நட்சத்திரங்கள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் 2 நிமிட டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.

Select City
Buy Theri (U) Tickets

ஏற்கனவே வெளியான டீசர் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் நிலையில், படத்தின் டிரெய்லரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.


இந்நிலையில் நேற்று வெளியான டிரெய்லர் தங்களை மிகவும் கவர்ந்திருப்பதாக நடிக, நடிகையர் பலரும் பாராட்டி வருகின்றனர்.


நயன்தாரா

டிரெய்லர் விஜய் ரசிகர்களுக்கான விருந்து என நடிகை நயன்தாரா, அட்லீயைப் பாராட்டி இருக்கிறார். அட்லீயின் முதல் ஹீரோயின் நயன்தாரா (ராஜா ராணி) என்பது குறிப்பிடத்தக்கது.


தனுஷ்

தெறி டிரெய்லர் சூப்பர். விஜய் சார் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று நடிகர் தனுஷ் பாராட்டியிருக்கிறார்.


சிவகார்த்திகேயன்

தெறி டிரெய்லர் உண்மையிலேயே தெறிக்க விட்டது. விஜய் சார் மற்றும் நண்பர்கள் அட்லீ, ஆண்டனி ரூபனுக்கு வாழ்த்துக்கள் என்று சிவகார்த்திகேயன் பாராட்டியிருக்கிறார்.


விஜய் சேதுபதி

தெறி டிரெய்லரைப் பார்த்தவுடன் விஜய் அண்ணாவை வெறுப்பவர்கள் கூட அவரைப் பாராட்டுவார்கள். தெறி டிரெய்லர் கிளாஸ்+மாஸ் என்று நடிகர் விஜய் சேதுபதி பாராட்டியிருக்கிறார்.


சிபி சத்யராஜ்

தெறி டிரெய்லர் பழைய வரலாறுகளை உடைத்து புதிதாய் ஒன்றைப் படைக்கப் போகிறது" என நடிகர் சிபிராஜ் பாராட்டியிருக்கிறார்.


இதுபோல மேலும் பல நட்சத்திரங்களும் தெறி டிரெய்லரைப் பாராட்டி வருகின்றனர்.
English summary
Celebrities Tweets About Vijay's Theri Trailer.
Please Wait while comments are loading...