twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராணா மட்டும் அல்ல இந்த பிரபலங்களும் குறைபாடை கடந்து வந்தவர்களே!

    By Siva
    |

    சென்னை: உடலில் குறைபாடு இருந்தும் அதை பெரிதாக நினைக்காமல் திரையுலக பிரபலங்கள் சிலர் சாதித்து காட்டியுள்ளனர்.

    உடலில் குறைபாடு இருப்பது ஒரு குறை அல்ல. அதை நினைத்து வருந்தாமல் நம் குறிக்கோளில் கவனம் செலுத்தினால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று பலர் சாதித்து காட்டியுள்ளனர்.

    அப்படி சாதித்து காட்டிய சில திரையுலக பிரபலங்களின் விபரம்,

    ராணா

    ராணா

    பாகுபலி படத்தில் பல்லாள தேவனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த தெலுங்கு நடிகர் ராணாவுக்கு வலது கண்ணில் பார்வை இல்லை. அந்த குறைபாட்டை அவர் பெரிதாக எடுத்துக் கொண்டு முடங்கிவிடவில்லை.

     ரித்திக் ரோஷன்

    ரித்திக் ரோஷன்

    பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு இந்தியா முழுவதும் ரசிகைகள் ஏராளம் ஏராளம். அவருக்கு சிறு வயதில் பேசுவதில் சிரமம் இருந்துள்ளது. அந்த சிரமத்தை தனது நம்பிக்கை, பேச்சு பயிற்சியால் கடந்து வந்துள்ளார்.

     அபிஷேக் பச்சன்

    அபிஷேக் பச்சன்

    பாலிவுட் நடிகரும், ஐஸ்வர்யா ராயின் கணவருமான அபிஷேக் பச்சனுக்கு குழந்தை பருவத்தில் டிஸ்லெக்சியா என்னும் கற்றல் குறைபாடு இருந்துள்ளது. இதை ஆமீர் கான் தனது தாரே ஜமீன் பர் படத்தில் கூட குறிப்பிட்டிருப்பார்.

     சுதா சந்திரன்

    சுதா சந்திரன்

    நடன கலைஞரும், நடிகையுமான சுதா சந்திரனுக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்ததில் வலது கால் வெட்டி எடுக்கப்பட்டது. அதை பொருட்படுத்தாமல் அவர் மீண்டும் நடனமாடத் துவங்கியதுடன், நடிக்கவும் வந்தார்.

     சுபாஷ் கபூர்

    சுபாஷ் கபூர்

    பிரபல பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கபூருக்கு ஒரு கை இல்லை. அவருக்கு 5 வயது இருக்கும்போது இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் அடிபட்டு இடது கை வெட்டி எடுக்கப்பட்டது. தனக்கு ஒரு கை இல்லை என்ற எண்ணமே இல்லை என்று கூறி வருபவர் சுபாஷ் கபூர்.

    English summary
    Above is the list of celebrities who have embraced their disabilities and emerged as winners.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X