»   »  கல்பனாவின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர், நடிகைகள்

கல்பனாவின் உடலை பார்த்து கதறி அழுத நடிகர், நடிகைகள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: மறைந்த நடிகை கல்பனாவின் உடலுக்கு மலையாள திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பிரபல நடிகை கல்பனா ஹைதராபாத் சென்ற இடத்தில் கடந்த 25ம் தேதி மரணம் அடைந்தார். மாரடைப்பால் மரணம் அடைந்த கல்பனாவின் உடல் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

கல்பனாவின் உடலுக்கு மலையாள திரையுலகை சேர்ந்த பலர் அஞ்சலி செலுத்தினர்.

அபிராமி

நடிகை அபிராமி கல்பனாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கல்பனாவின் வீட்டில் பிரபலங்களும், மக்களும் கூடி அஞ்சலி செலுத்தினர்.

ஊர்வசி

நடிகை ஊர்வசி தனது சகோதரியின் உடலுக்கு அருகே அமர்ந்து அழுது கொண்டே இருந்தார். ஊர்வசியின் பிறந்தநாள் அன்று கல்பனா மரணம் அடைந்தார்.

துல்கர்

நடிகர் துல்கர் சல்மான் கல்பனாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். தான் குழந்தையாக இருக்கையில் இருந்தே கல்பனாவுடன் பழகி வந்தவர் துல்கர்.

நஸ்ரியா

நடிகை நஸ்ரியா தனது கணவர் பஹத் பாசிலுடன் வந்து கல்பனாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

காவேரி

பிரபல நடிகை காவேரி கல்பனாவின் உடலை பார்த்ததும் துக்கம் தாங்க முடியாமல் அழுதார்.

காவ்யா மாதவன்

மலையாள திரையலகின் பிரபல நடிகையான காவ்யா மாதவன் கல்பனாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மனோஜ்

ஊர்வசியின் முன்னாள் கணவரும், நடிகருமான மனோஜ் கே.ஜெயன் கல்பனாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கல்பனா தனக்கு ஒரு சகோதரி போன்றவர் என்றார் மனோஜ்.

ப்ரித்விராஜ்

நடிகர் ப்ரிவிராஜ் கல்பனாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். கல்பனாவின் மரண செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

பிரபலங்கள்

மலையாள நடிகர், நடிகைகள் பலரும் கல்பனாவுக்கு அஞ்சலி செலுத்தினர். பலர் துக்கம் தாங்க முடியாமல் அழுதனர்.

English summary
Mollywood celebs paid tribute to actress Kalpana who passed away on january 25th in Hyderabad.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos