»   »  இதுவும் எங்க ஏரியாதான்.. குற்றாலத்திற்கு இடம் பெயரும் “சென்னை 28”!

இதுவும் எங்க ஏரியாதான்.. குற்றாலத்திற்கு இடம் பெயரும் “சென்னை 28”!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெற்றிப்படமான சென்னை 28-ன் இரண்டாம் பாக படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

கிரிக்கெட்டைக் கதைக்களமாகக் கொண்டு கடந்த 2007ம் ஆண்டு ஜெய், பிரேம்ஜி, சிவா என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்த படம் சென்னை 28. வித்தியாசமான திரைக்கதையால் படம் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடியது.


இந்நிலையில், பிரியாணி, மாஸ் படங்கள் எதிர்பார்த்த அளவில் ஓடாததால், தனது சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்தார் வெங்கட் பிரபு.


அதே டீம்...

முதல் பாகத்தில் நடித்த அதே நடிகர்கள் மீண்டும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். இந்தப் படத்துக்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.


பர்ஸ்ட் லுக் போஸ்டர்...

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், வீடியோ வடிவில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு சமூகவலைத்தளத்தில் நல்ல பாராட்டுகள் கிடைத்தன. சூர்யா உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.


 


 


படப்பிடிப்பு...

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இதனை வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.


கிரிக்கெட் தான்...

முதல்பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் கிரிக்கெட் தான் கதைக்களமாம். ஆனால், சென்னை மைதானத்தை தாண்டி இம்முறை, இந்த டீம் குற்றாலம், தேனி, தென்காசி என தமிழகத்தின் பலப்பகுதிகளுக்கு பயணம் செய்ய இருக்கிறதாம்.


 


 


குற்றாலம் பயணம்...

முதல் கட்டமாக சென்னையில் 10 நாட்கள் படப்பிடிப்பை முடித்து விட்டு, சென்னை 28 டீம், மேற்கூறிய ஊர்களுக்கு செல்கிறதாம். அங்கு சுமார் இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.


அதே... அதே...

இடங்கள் மாறினாலும், முதல் பாகத்தில் இருந்த கிரிக்கெட், நகைச்சுவை, நட்பு, காதல் என அனைத்து அம்சங்களும் இரண்டாம் பாகத்தில் வேறுபட்ட வித்தியாசமான வகையில் இடம் பெறும் என படக்குழுவினர் கூறுகின்றனர்.


English summary
Chennai 28 was a cult classic of sorts and the film gave an iconic representation to Venkat Prabhu. Its sequel of ‘Chennai 28 part 2’ commenced with a traditional Pooja.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos