twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எடுத்த எடுப்பிலேயே கெட்ட பெயர் வாங்கிய திநகர் ஏஜிஎஸ் மல்டிப்ளெக்ஸ்!

    By Shankar
    |

    ஒரு காலத்தில் சன், நாகேஷ், கிருஷ்ணவேணி, ஸ்ரீனிவாசா என நான்கைந்து தியேட்டர்கள் இருந்தன தி நகர்வாசிகளுக்கு. இப்போது இவற்றில் கிருஷ்ணவேணி மட்டும்தான் மிஞ்சியுள்ளது. வேறு அரங்குகள் இல்லை.

    சில வாரங்களுக்கு முன் ஜிஎன் செட்டி தெருவில் நான்கு தியேட்டர்கள் கொண்ட புதிய மல்டிப்ளெக்ஸைத் திறந்து அந்தக் குறையைப் போக்கியது ஏஜிஎஸ் நிறுவனம்.

    Cinema lovers curse T Nagar AGS multiplex

    ஆனால் ஆரம்பத்திலேயே ஏக அதிருப்தியைச் சம்பாதித்துள்ளது இந்த மல்டிப்ளெக்ஸ்.

    தி நகர் என்றாலே போக்குவரத்து நெரிசல்தான். மக்கள் மீது வாகனங்கள் ஏறிப் போக வேண்டிய அளவுக்கு நெரிசலோ நெரிசல். ஜிஎன் செட்டி சாலையில் பிற்பகலில் மட்டும்தான் கொஞ்சம் சுமாராக இருக்கும் போக்குவரத்து. மற்ற நேரங்களில் விழி பிதுங்கும்.

    இந்த பிரதான பகுதியில் தியேட்டரை அமைத்துள்ள ஏஜிஎஸ், இரு சக்கர வாகனங்களை நிறுத்த சரியான வசதி, வழியை வைக்கவில்லை என்பது பிரதான குற்றச்சாட்டு. அடுத்து வெட்ட வெளியில் மண் தரையில் வாகனத்தை நிறுத்த ப்ளாட் ரேட்டாக ரூ 50 வசூலிப்பதையும் குறையாகக் கூறியுள்ளனர் பார்வையாளர்கள்.

    'அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் தியேட்டருக்குப் போகிற நம்மை அதன் பணியாளர்கள் நடத்தும் விதம்தான் ரொம்பக் கேவலமாக இருக்கிறது. திநகர் ஏஜிஎஸ்ஸில் படம் பார்க்க வேண்டும் என்றால் டூ வீலரில் போகிறவர்கள் குறைந்தது ஒரு மணி நேரம் முன்பாகப் போக வேண்டும். அப்படி போய் வண்டியை நிறுத்திவிட்டாலும், உள்ளே விட மாட்டார்கள். ஷோ டைம் வரை வெளியே வெளியிலில் காய விடுகிறார்கள். இது என்ன நியாயம்?' என்று குமுறுகிறார் அண்மையில் போய் வந்த அனுபவஸ்தர் ஒருவர்.

    "இப்படி ஒரு தியேட்டருக்கு வந்து, இவனுங்களுக்கு அடிமை மாதிரி படம் பாக்குறதுக்கு, ரூ 30 கொடுத்து திருட்டு டிவிடி வாங்கி வீட்டுல போட்டு ராஜா மாதிரி குடும்பத்தோட பாத்துட்டுப் போறேன்.. போங்கப்பா!"

    -இது இன்னொரு குடும்பஸ்தரின் கமெண்ட்.

    ஏஜிஎஸ்ஸுக்கு மட்டுமல்ல, மல்டிப்ளெக்ஸ் என்ற பெயரில் பார்க்கிங் மற்றும் கெடு பிடி காட்டும் அத்தனை தியேட்டர்காரர்களுக்குமான எச்சரிக்கைதான் இது!

    Read more about: t nagar theater
    English summary
    Cinema lovers have starting to curse T Nagar AGS Multiplex, the recently opened franchise in the over crowded area for its worst treatment and high parking charges.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X