twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்ப உங்களுக்குப் புரியாம பாடனும், அவ்வளவுதானே.. பண்றேய்யா.... டி.ஆர். ஆவேசம்!

    |

    சென்னை: கீ-போர்டு வாசிக்கிறவன் எல்லாம் இசையமைப்பாளரா? பாடல் எல்லாம் ஹிட்டா. இனிமேல் டி.ஆர். மியூசிக் பண்ணினால் பாதி வார்த்தை ஆங்கிலத்தில் தான் எழுதப் போறேன். இப்போ உங்களுக்கு புரியமா பாடணும், புரியாமல் பண்ணனும் அவ்வளவு தானே. பண்றேன்யா.. என்று கோபமாக கூறியுள்ளார் இயக்குநர் டி.ராஜேந்தர்.

    பத்ரி இயக்கத்தில் சிம்ஹா, கருணாகரன், பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'ஆடாம ஜெயிச்சோமடா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் டி.ராஜேந்தர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    அப்போது அவர் திருட்டு வி.சி.டி. பிரச்சினை குறித்துப் பேசினார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது :-

    டிக்கெட் அதிகம்...

    டிக்கெட் அதிகம்...

    இன்றைக்கு பெண்களை மையப்படுத்தி படம் எடுத்தால், திரையரங்கிற்கு பெண்கள் வருவதில்லை. காரணம் டிக்கெட் விலை. ஒரு வாரத்தில் 8 படங்கள் ரிலீஸானால் எப்படி ஓடும். மலை போல் படங்கள் குவிந்தால் படங்கள் எப்படி ஓடும். பெண்கள் மையப்படுத்திய படங்கள் டிக்கெட் விலையை குறைத்தால் மட்டுமே ஓடும்.

    3 முதல்வர்களுக்கு எதிராக...

    3 முதல்வர்களுக்கு எதிராக...

    என்னுடைய படங்களுக்கு திருட்டு வி.சி.டி வந்த போது, வீதிகளில் இறங்கி கடையை உடைத்தேன். எத்தனை கேஸ் தெரியுமா? மூன்று முதலமைச்சர்களுக்கு எதிராக இறங்கி போராடினேன் என்றால் இழந்து இருக்கிறேன் அத்தனை கோடி. அதனால்தான் துணிச்சலாக நிற்கிறான் இந்த தாடி. அதனால் டி.ஆர் பேசுகிறான் என்றால் கூட்டம் நிற்கிறது கூடி.

    டிக்கெட் விலை கம்மி...

    டிக்கெட் விலை கம்மி...

    கர்நாடகாவில் ஒரு திருட்டி வி.சி.டி காட்டுங்க. முடியாது. பயப்புடுகிறான். ஆந்திராவிலும் கிடையாது. ஏனென்றால் டிக்கெட் ரேட் கம்மி. மலையாளத்தில் த்ரிஷ்யம் படம் 64 கோடி வசூல். மக்கள் திரையரங்கிற்கு வருகிறார்கள். மூன்று நாட்களுக்கு ஓடினால் படமா. படம் போடுகிறார்கள் அத்தனை கோடி, படத் தயாரிப்பாளரோ தெரு கோடி. என்ன வெற்றி.

    ஆங்கிலப் பாடல்...

    ஆங்கிலப் பாடல்...

    கீ-போர்டு வாசிக்கிறவன் எல்லாம் இசையமைப்பாளரா? பாடல் எல்லாம் ஹிட்டா. இனிமேல் டி.ஆர். மியூசிக் பண்ணினால் பாதி வார்த்தை ஆங்கிலத்தில் தான் எழுதப் போறேன். இப்போ உங்களுக்கு புரியமா பாடணும், புரியாமல் பண்ணனும் அவ்வளவு தானே. பண்றேன்யா.. சினிமாவில் எப்படி சம்பாதிக்கணும் என்று ரூட் போட வேண்டும். சினிமா அழிஞ்சுட்டு இருக்கு.

    ஏதோ ஆதங்கம்...

    ஏதோ ஆதங்கம்...

    ஆந்திரா, கர்நாடகாவில் திருட்டு வி.சி.டி ஒழிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏன் ஒழிக்கப்படவில்லை. ஆட்சியாளர்கள் நினைத்தால் மட்டுமே திருட்டு வி.சி.டியை ஒழிக்க முடியும். முதல்வர் பார்வைக்கு கோரிக்கை வைக்க வேண்டும். உங்களால் பேச முடியவில்லையா. அந்தம்மாவிற்கு உங்கள் மேல் ஏதோ ஆதங்கம்.

    குறுக்கு வழி...

    குறுக்கு வழி...

    குறுக்கு வழியில் போனால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும். நேர்மையாக இருந்தால் முடியாது" என இவ்வாறு தனது பேச்சில் அவர் தெரிவித்தார்.

    English summary
    The Tamil film director and actor T.Rajendar has said the high ticket rates leads to the increase in piracy and illegal DVDs in Tamilnadu.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X