»   »  'தோட்டா தெறிக்க தெறிக்க வேட்டா வெடிக்க வெடிக்க' மார்ச் 20 முதல் தெறி பாடல்கள்

'தோட்டா தெறிக்க தெறிக்க வேட்டா வெடிக்க வெடிக்க' மார்ச் 20 முதல் தெறி பாடல்கள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டுத் தேதியை இயக்குநர் அட்லீ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

அதன்படி இப்படத்தின் இசை வெளியீடு மார்ச் 20 ம் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. அட்லீயின் இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்களை தற்போது பன்மடங்கு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


ஜித்து ஜில்லாடி, செல்லாக்குட்டி, தோட்டா தெறிக்க தெறிக்க உட்பட மொத்தம் இப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.


மார்ச் 20

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் தெறி படத்தின் இசை வெளியீட்டுத் தேதி, மார்ச் 20 ம் தேதி நடைபெறும் என இயக்குநர் அட்லீ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் 'தோட்டா தெறிக்க தெறிக்க வேட்டா வெடிக்க வெடிக்க' மார்ச் 20 ம் தேதி தெறி பாடல்கள் வெளியாகும் என்று கூறியிருக்கிறார். மேலும் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.


13 பாடகர்கள்

இந்த 7 பாடல்களை ஜி.வி.பிரகாஷ், உத்ரா உன்னிக்கிருஷ்ணன், பாம்பே ஜெயஸ்ரீ, நீதி மோகன், தேவா, பாலச்சந்திரன், வைக்கம் விஜயலட்சுமி, விஜய், சைந்தவி, ஹரிஹரன், அருண் ராஜ காமராஜ், சோனு கக்கர் மற்றும் டி.ராஜேந்தர் ஆகிய 13 பாடகர்கள் பாடியுள்ளனர்.


 


 


ஜித்து ஜில்லாடி

இப்படத்தில் இடம்பெறும் 'ஜித்து ஜில்லாடி' விஜய்யின் ஓபனிங் பாடலாக படத்தில் இருக்கும் என்று ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். இதனால் இசை வெளியீட்டிற்கு முன் 'ஜித்து ஜில்லாடி' ஒற்றைப்பாடலை வெளியிட வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோரி வருகின்றனர்.


தயாரிப்பாளர்

இப்படத்தின் பாடல்களை தயாரிப்பாளர் தாணுவிடம் வழங்கி விட்டதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார். இதனால் #theri மற்றும் #theriaudio போன்ற ஹெஷ்டேக்குகள் ட்விட்டரில் ட்ரெண்டடித்து வருகின்றன.


திங் மியூசிக்

இப்படத்தின் ஆடியோ உரிமையை திங் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிறுவனம் இதற்கு முன் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களின் ஆடியோ உரிமையை வாங்கியது குறிப்பிடத்தக்கது.


English summary
Confirmed: Vijay's Theri Audio Launch Date now Revealed. Director Atlee Announced Theri Audio Release will be held on March 20.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos