twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலாபவன் மணி விவகாரம்: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மோகன்லால்

    By Siva
    |

    திருவனந்தபுரம்: கலாபவன் மணி விவகாரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    கலாபவன் மணியும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் பல படங்களில் சேர்ந்து நடித்தபோதிலும் அவர் இறந்தபோது அமைதி காத்தார். இதனால் ரசிகர்கள் மோகன்லாலை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தனர். அதன் பிறகே மவுனம் கலைத்தார் மோகன்லால்.

    இந்நிலையில் மணி விவகாரத்தில் அவர் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    இரங்கல் கூட்டம்

    இரங்கல் கூட்டம்

    கலாபவன் மணியின் சொந்த ஊரான திருச்சூர் மாவட்டம் சாலக்குடியில் மலையாள திரையுலகினர் சார்பில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மணியை

    வைத்து 13 படங்கள் இயக்கிய வினயன் வரவில்லை. அவரை கூட்டத்திற்கு யாரும் அழைக்கவில்லை.

    லால் தான்

    லால் தான்

    மணியின் இரங்கல் கூட்டத்திற்கு வினயனை அழைக்கக் கூடாது என்று மோகன்லால் தான் கறாராக கூறியதாக இயக்குனர் பைஜு கொட்டாரக்காரா தெரிவித்துள்ளார்.

    வர மாட்டேன்

    வர மாட்டேன்

    நான் கூறியதையும் மீறி யாராவது வினயனை கூட்டத்திற்கு அழைத்தால் நான் வர மாட்டேன் என்று மோகன் லால் தெரிவித்தார் என்று பைஜு கூறியுள்ளார். லாலின் பேச்சை மீற முடியாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வினயனை அழைக்கவில்லை.

    இயக்குனர்

    இயக்குனர்

    ராணுவம் சார்ந்த கதை கொண்ட படங்களை எடுக்கும் இயக்குனரை மணியின் இரங்கல் கூட்டத்திற்கு மறக்காமல் அழைக்குமாறு மோகன்லால் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அந்த இயக்குனர் மணியை வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை.

    லால் போய்

    லால் போய்

    மோகன்லால் போய் தனிப்பட்ட விரோதத்தை இப்படி பொது இடத்தில் காட்டுவதை பார்க்க வேதனையாக உள்ளது என்று பைஜு தெரிவித்துள்ளார். லாலுக்கும், வினயனுக்கும் ஆகவே ஆகாது என்பது மல்லுவுட் அறிந்தது.

    English summary
    The controversies upon the Kalabhavan Mani condolence meet have reached a whole new level. The superstar who demanded to omit director Vinayan from the list of invitees, is none other than Mohanlal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X