twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'கத்தி' கதை வழக்கு... தீர்த்து வைத்தது நீதிமன்றம்!

    By Shankar
    |

    கத்தி படத்தின் கதை தொடர்பான வழக்கில் ஏ ஆர் முருகதாசுக்கு சாதகமாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் கத்தி திரைப்படத்திற்கு தொடர்ந்து பல பிரச்சனைகள் உருவாகிவந்தன.

    Court settles Kaththi story case

    கத்தி படம் ரிலீஸாகுமா? எனும் அளவுக்கு பிரசனைகள் விஸ்வரூபம் எடுத்தது. படத்துக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து போராட்டக்காரர்கள் இறங்கி வரவில்லை.

    இன்னொரு பக்கம் கத்தி படத்தின் கதை, கோபி என்ற உதவி இயக்குநரிடமிருந்து திருடப்பட்டது என்ற வழக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தியாய் பயமுறுத்திக் கொண்டிருந்தது படக்குழுவினரை.

    நேற்று இந்த வழக்கை விசாரித்த சென்னை சிவில் கோர்ட், ‘கத்தி' கதை ஏ.ஆர்.முருகதாஸினுடையது தான் என்றும், கோபிக்கும் இந்த கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லையென்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    முருகதாஸின் பிறந்த நாளான நேற்று இந்த நல்லதொரு தீர்ப்பை, முருகதாஸின் பிறந்தநாள் பரிசாக நீதிமன்றம் வழங்கியிருப்பதாக கூறி கொண்டாடியிருக்கின்றனர் நெல்லூரில் படப்பிடிப்பில் இருந்த கத்தி படக்குழுவினர்.

    English summary
    The City Civil court has declared that Kaththi story is not copied from an Assistant Director.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X