» 

தமிழில் 'கரிமேடு' ஆன கன்னட தண்டுபாலயா!

Posted by:

சில மாதங்களுக்கு முன்பு கன்னடத்தில் தண்டுபால்யா என்ற பெயரில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பிய சர்ச்சைப் படம், இப்போது கரிமேடு என்ற பெயரில் தமிழுக்கு வருகிறது.

தண்டுபால்யா கன்னடத்தில் வெளியான போது ஏகப்பட்ட எதிர்ப்புகளைச் சந்தித்தது. இந்தப் படத்தை வெளியிடத் தடை கோரியிருந்தார்கள். ஆனால் ஒருவழியாக வெளியானது.

தண்டுபால்யா

தண்டுபால்யா என்பது பெங்களூர் அருகே உள்ள ஒரு கிராமம். இங்கிருந்து கிளம்பிய ஒரு கும்பல் பணம், நகைக்காக கொடூர கொலைகளைச் செய்து வந்தனர். முக்கியமாக பெங்களூர், மாண்டியா, மைசூர் பகுதிகளில் உள்ள பெண்களைத்தான் அவர்கள் குறிவைத்துத் தாக்கினர்.

500 கொலைகள்

தண்டுபால்யா கும்பல் இதுவரை 500-க்கும் மேற்பட்ட கொலைகளை 1999 முதல் 2001-ம் ஆண்டுக்குள் செய்திருக்கிறது. ஆண், பெண், குழந்தைகள் அடங்கிய இந்த கும்பல், முதலில் ஒரு வீட்டைக் குறி வைப்பார்களாம். அந்த வீட்டினரின் நடவடிக்கைகளை நோட்டம் விட்ட பிறகு, அடுத்த நாளே வீட்டில் உள்ளவர்களின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு பணம் நகைகளோடு தப்பி விடுவார்களாம்.

இன்னும் தொடரும் பயம்

இந்த கும்பலைச் சேர்ந்த 16 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பலர் ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். ஆனாலும் இன்னும் கூட கொலைகார கும்பல் என்ற பழி விலகாமல் இருக்கிறது தண்டுபால்யா கிராமம். அந்த ஊருக்கு செல்லும் பஸ் கூட, அந்தப் பெயர் பலகையை தாங்கிச் செல்வதில்லை. 5000 பேருக்கு மேல் வசிக்கும் அந்த கிராமம், உலகோடு ஒட்ட முடியாமல் இன்னும் விலகியே உள்ளது.

பூஜா காந்தி

இந்தக் கதையைத்தான் தண்டுபால்யா என்ற பெயரில் படமாக்கினார் சீனிவாச ராஜ். பூஜா காந்தி, ரகு முகர்ஜி நடித்துள்ளனர். பூஜா காந்தி கிட்டத்தட்ட அரை நிர்வாண கோலத்தில் தோன்றிய படங்கள் வெகு பிரபலம். அவற்றில் சிலவற்றைத்தான் இங்கே பார்க்கிறீர்கள்.

See next photo feature article

கரிமேடு

இதன் தெலுங்குப் பதிப்பு சமீபத்தில் ஆந்திராவில் வெளியாகு நல்ல வசூல் பார்த்தது. அதே நம்பிக்கையில் தமிழில் இந்தப் படத்தை கரிமேடு என்ற தலைப்பில் வெளியிடுகிறார்கள்.

Read more about: pooja gandhi, பூஜா காந்தி, கரிமேடு, karimedu
English summary
Pooja Gandhi starrer controversial Kannada movie Dhandupalaya is coming as Karimedu in Tamil.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos