»   »  பொறுப்பேற்ற கையோடு "பாண்டவர்"களைக் கைகழுவிய விஷால்!

பொறுப்பேற்ற கையோடு "பாண்டவர்"களைக் கைகழுவிய விஷால்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியை வீழ்த்தி, அதிக இடங்களில் வெற்றி பெற்றது விஷால் அணி. நடிகர் சங்கத் தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் தேர்வு செய்யப்பட்டனர்.

Definitely we will keep up the promises: Vishal

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக அச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. நடிகர் நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், விஷால் உட்பட புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார் விஷால். அப்போது அவர் கூறியதாவது:

நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களித்த மூத்த உறுப்பினர்கள் உள்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்.

பாண்டவர் அணி என்ற பெயரை சிலர் தவறாக பயன்படுத்துகின்றனர். பாண்டவர் அணி என்ற பெயர் கைவிடப்படுகிறது. எந்த சங்கத்திற்கும் நாங்கள் ஆதரவோ, எதிர்ப்போ இல்லை' என அவர் தெரிவித்தார்.

English summary
Actor Vishal has said that his team will definitely fulfill all the promises, which was given at election time.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos