twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிமாண்டி காலனியா, திகில் காலனியா...?

    By Manjula
    |

    சென்னை: வழக்கமாக பெண் பேய்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த தமிழ் சினிமாவில் தற்போது ஆண் பேய்களின் அராஜகம் ஆரம்பித்து விட்டது.அதற்கு வழி அமைத்துக் கொடுத்திருப்பவர் அருள்நிதி.

    அருள்நிதியின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள டிமாண்டி காலனி திரைப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறதாம். குறிப்பாக ஆண்களும் பேயாக வருவதை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

    இனி அனைத்துக் ஹீரோக்களும் பேயாக மாறுவதை தமிழ் ரசிகர்கள் கண்கூடாகப் பார்க்கலாம். அறிமுக இயக்குனர் அஜய் ஞானமுத்து தான் ஏற்கனவே சொன்னது போல சீரியஸாக ஒரு பேய் படத்தை எடுத்திருக்கிறார்.

    இதயம் பலவீனமானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் இந்தப் படத்தை தவிர்க்கவும் என்று படம் பார்த்தவர்கள் சொல்கிறார்கள். படம் பார்த்தவர்கள் கூறிய கருத்துக்களின் தொகுப்பு.....

    டிமாண்டி காலனி

    டிமாண்டி காலனி

    அங்கே போகாதே பேய் இருக்குது என்று எல்லாரும் பயப்படுகிற ஒரு காலனிக்கு அருள்நிதி அண்ட் நண்பர்கள் கோ குழுவாக சென்று ஒரு இரவு தண்ணி அடிக்கின்றனர். தண்ணி அடிச்சுட்டு திரும்பி வரும்போது சும்மா வராம பேயோட பொருள் ஒன்ன ஆட்டயப் போட்டுட்டு வராங்க.. அந்த பொருள் வழியா பேய் இவங்க வீட்டுக்கு வந்து குடும்பம் நடத்துது. அருள்நிதியும் அவரோட நண்பர்களும் பேய்கிட்ட இருந்து தப்பிச்சாங்களா இல்லையா இதுதான் கதை.

    ஹூ இஸ் டிமாண்டி

    ஹூ இஸ் டிமாண்டி

    பிரிட்டிஷ்காரங்க ஆட்சியில வாழ்ந்த டிமாண்டி சிலபல காரணங்களால் செத்து போகிறார். அவர் பேயா மாறி அந்த காலனியில வாழ்ந்திட்டு இருக்க, இது தெரியாம ஹீரோ அருள்நிதி சரக்கடிச்சுட்டு அவர சட்ட பாக்கெட்ல போட்டு எடுத்து வந்துறாரு.

    ஆவியாக அருள்நிதி

    ஆவியாக அருள்நிதி

    நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் அருள்நிதியின் நம்பிக்கையைக் காப்பாற்றி இருக்கிறது டிமாண்டி காலனி.வாழ்க்கையை வெறுத்து, நண்பர்களுடன் திரியும் அருள்நிதி தன் பேய் நடிப்பால் நம்மைக் கவர்கிறார்.

    ஒரே அறையில் கொஞ்சம் கதை

    ஒரே அறையில் கொஞ்சம் கதை

    நண்பர்கள் நாலு பேரை வைத்து ஒரு ரூமிருக்குள்ளே எடுத்திருந்தாலும் சலிப்படைய வைக்காத காட்சிகளால் நம்மைக் கவர்கிறார் இயக்குனர்.

    நாலு நண்பர்களுடன் மதுமிதா

    நாலு நண்பர்களுடன் மதுமிதா

    இந்தப் படத்தில் நண்பர்கள் நான்கு பேரைத் தவிர்த்து வரும் ஒரே பெண் மதுமிதா மட்டுமே.ஹீரோயின் இல்லை என்ற குறை கொஞ்சம் கூட தெரியவில்லை.

    பின்னணி இசை

    பின்னணி இசை

    படத்தோட இசை நல்ல இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சம் ஹாலிவுட் சாயல் அடிக்கிறது. டிமாண்டி என்று வைத்ததால் ஹாலிவுட்டை சுட்டு விட்டார்கள் போல.

    தமிழ்ப் படத்துல கொரியன் கிளைமாக்ஸ்

    தமிழ்ப் படத்துல கொரியன் கிளைமாக்ஸ்

    படம் நல்லா இருக்கு ஆனா அந்த கிளைமாக்ஸ் ஒரு கொரியன் சீரியலை ஞாபகப்படுத்துகிறது.(எல்லாரும் இப்போ ரொம்ப அலெர்ட் பாஸ்...)

    அஜய் ஞானமுத்து

    அஜய் ஞானமுத்து

    அறிமுக இயக்குனராக இருந்தாலும் கில்லி மாதிரி ஒரு கதையைச் சொல்லி அடித்து முதல் படத்துலேயே பாஸ் பண்ணிட்டாரு முருகதாசோட அசிஸ்டன்ட் அஜய்.

    நல்ல திகில் படம் ரொம்ப நாள் கழிச்சு தமிழ்ல வந்திருக்கு ஹாலிவுட் பாணியில இருந்தாலும் கட்டாயம் பார்க்கலாம் படத்தை என்பது பார்த்தவர்கள் தரும் தீர்ப்பு.

    English summary
    The movie takes some time to settle down in the first half but gets engaging as it approaches the interval block. Second half comes out as a winner with enough horror elements to keep you spooked throughout.the director for choosing a horror subject in his debut movie and delivering it in the best way possible. Demonte Colony is not for the weak-hearted.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X