»   »  சன் டிவியில் அனேகன்... கொந்தளிக்கும் ரசிகர்கள்... தனுஷ் வேண்டுகோள்

சன் டிவியில் அனேகன்... கொந்தளிக்கும் ரசிகர்கள்... தனுஷ் வேண்டுகோள்

Posted by:
Subscribe to Oneindia Tamil

அனேகன் படத்தை வரும் ஏப்ரல் 14-ம் தேதி சித்திரைப் புத்தாண்டு தினத்தில் சன் டிவி ஒளிபரப்புவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது தனுஷ் ரசிகர்களிடமிருந்து.

ஆனால் இது பற்றி யாரும் கோபமடைய வேண்டாம் என நடிகர் தனுஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சன் டிவிக்கு எதிர்ப்பு

அனேகன் படம் வருகிற தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது. திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு படத்தை எப்படி டிவியில் ஒளிபரப்பலாம் என்று கொந்தளித்து சமூக வலைத் தளங்களில் கொந்தளித்து வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள். சமீபத்தில் படம் 50-வது நாளை வெற்றிகரமாகக் கொண்டாடியது. சில திரையரங்குகளில் இன்னமும் ஓடிக்கொண்டிருக்கிறது இந்தப் படம்.


100 ஓட வேண்டாமா?

படம் 100 நாள் ஓடவேண்டும். விழா எடுக்க வேண்டும் தனுஷ் ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், படத்தை டிவியில் போடுவதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


ட்விட்டரில் #StopAneganPremireSunTvஎன்றொரு ஹேஷ்டேகையும் பயன்படுத்தி ட்வீட் செய்து வருகிறார்கள்.


 


தனுஷ் வேண்டுகோள்

இதனையடுத்து, நடிகர் தனுஷ் தன் ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலமாக ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது:

அனேகன் படம் டிவியில் ஒளிபரப்பாவது குறித்து ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும். தயாரிப்பு நிறுவனத்துக்கும் சேனலுக்கும் உள்ள ஒப்பந்தம் குறித்து எனக்குத் தெரியாது. அதனால் கருத்து கூறமுடியாது.


படம் சூப்பர் ஹிட்..

படம் (அனேகன்) சூப்பர் ஹிட். அதுதான் முக்கியம். அதன்பிறகும் படம் டிவியில் ஒளிபரப்பப்பட்டால் அதிக அளவிலான மக்கள் கண்டுகளிக்கட்டும் என்று விட்டுவிடுவோம்.


English summary
Dhanush fans are strongly opposed Sun TV's announcement of telecasting Anegan movie on April 14th.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos