»   »  தனுஷ் ரொம்ப ஃபிரண்ட்லி - உற்சாகமாகப் பேசும் 'பவர் பாண்டி' இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்

தனுஷ் ரொம்ப ஃபிரண்ட்லி - உற்சாகமாகப் பேசும் 'பவர் பாண்டி' இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்

தனுஷ் சீனியர் போல் நடந்துகொள்ளாமல், மிகவும் ஃபிரண்ட்லியாக நடந்துகொண்டார் என பவர் பாண்டி திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் கூறியுள்ளார்.

Written by: Suganthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: பவர் பாண்டி தனுஷ் இயக்கும் திரைப்படம். இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் முதன்முதலாக தனுஷ் உடன் இணைந்து பணியாற்றுகிறார். தனுஷின் திரைப்படத்தில் இசையமைப்பாளராகப் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார் ஷான் ரோல்டன்

தனுஷ் இயக்குநராக பரிணமித்த படம் பவர் பாண்டி. தனுஷுடன் இணைந்தது குறித்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தன் அனுபவங்களை பகிர்ந்துகொண்டதாவது:


 Dhanush is so friendly saying music director Sean roldan

தனுஷ் என்னை அவருடைய திரைப்படத்தில் ஒர்க் பண்ண வைத்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். அவருக்கு சினிமா மீதும் இசை மீதும் மிகப் பெரிய காதல் இருக்கிறது. அதனால் தான் ஒரு பாடலை நான்கே நிமிடங்களில் எழுதிவிட்டார். இதற்கு மிகப் பெரிய இறை அருளும் உழைப்பும் வேண்டும்.


தனுஷ், இறை சக்தியை அதிகம் நம்புகிறவர். அதுமட்டுமில்லாமல் இசையில் அவருக்கு நிறைய நாலேட்ஜ் இருக்கிறது. அதனால், ஒவ்வொரு விஷயத்தையும் என்னிடம் கேட்டுக் கேட்டு வாங்கினார்.


ஒரு சீனியரிடம் வேலை பார்ப்பது போன்று உணர்வில்லை. மிகவும் ஃபிரண்டிலியாக, வேலை பார்ப்பதே தெரியாமல் வேலை வாங்குவதுதான் அவருடைய சிறப்பு. என்னிடம் ஒரு நண்பனைப் போல பழகினார். பாடல்களுக்கு ட்யூன் போடுவதற்கு முன்பு, நாங்கள் இருவரும் நிறைய பாடல்களைக் கேட்டோம். தனுஷின் சின்சியாரிட்டிதான் அவரை இயக்கம், நடிப்பு, பாடலாசிரியர் என இயங்க வைக்கிறது'' என ஷான் ரோல்டன் கூறினார்.


மேலும் தனுஷின் அடித்த படமான விஐபி - 2 படத்திலும் ஷான் ரோல்டனே இசையமைப்பாளர்

English summary
Sean Roldan, music director of Power Pandi film, sharing his work experience with Dhanush.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos