»   »  கிரிக்கெட்டில் பெஸ்ட் ஃபினிஷர்… சினிமாவில் பெஸ்ட் ஒப்பனர் ஆன டோணி!

கிரிக்கெட்டில் பெஸ்ட் ஃபினிஷர்… சினிமாவில் பெஸ்ட் ஒப்பனர் ஆன டோணி!

Posted by:
Subscribe to Oneindia Tamil

கிரிக்கெட் வீரர் டோணிக்கு இந்தியா முழுக்கவே ரசிகர்கள்தான். குறிப்பாக தமிழகத்தில் அதிகம். காரணம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டதும், சென்னை வரும்போதெல்லாம் இது என் சொந்த மண் போல என்ற ரீதியில் பேட்டி கொடுப்பதும்தான்.

அதுமட்டுமின்றி, நம்ம சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகன் டோணி. போகுமிடமெல்லாம் ரஜினி புகழ் பாடுபவர். தலைவர் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வேண்டும் என்ற வெறியை மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்களிடமும் பத்த வைத்த 'பெருமை' இவருக்குண்டு.

Dhoni, the best opener in Cinema

அந்த டோணியின் வாழ்க்கை வரலாறை அப்படியே படம் எடுத்திருக்கிறார் நீரஜ் பாண்டே. மொத்தம் 185 நிமிடங்கள் ஓடும் 'டோணி அன் அன்டோல்டு ஸ்டோரி' படம் இன்று வெளியாகிறது. டோணிக்கு தமிழ்நாட்டில் இருக்கும் செல்வாக்கை பார்த்த படத் தயாரிப்பாளர்கள் போட்றா தமிழ்ல ஒரு பிரிண்டை என்று தமிழில் முதல் பயோபிக் படமாக டப் செய்து வெளியிட்டு இருக்கிறார்கள்.

வேறு தமிழ் படம் எதுவும் இந்த வாரம் ரிலீஸாகாத நிலையில் டோணிக்கு அபார வரவேற்பு கிடைத்திருக்கிறது. திரையிடும் தியேட்டர்களில் எல்லாம் நேற்று முன் தினமே டிக்கெட்கள் தீர்ந்துவிட்டன.

English summary
Dhoni - An Untold Story gets tremendous response in Tamil Nadu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos