»   »  புற்றுநோய், குழந்தையின்மை: நடிகை ரேகா விஷம் குடித்து தற்கொலை?

புற்றுநோய், குழந்தையின்மை: நடிகை ரேகா விஷம் குடித்து தற்கொலை?

Posted by:
Subscribe to Oneindia Tamil

திருச்சூர்: புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த நடிகை ரேகா மோகன் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.

மலையாள சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்மூட்டி படங்களில் நடித்தவர் ரேகா மோகன்(45). மலையாள தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

மாயம்மா என்ற தொலைக்காட்சி தொடர் அவருக்கு பெயரும், புகழும் பெற்றுத் தந்தது.

அபார்ட்மென்ட்

திருச்சூரில் அள்ள ஷோபா சிட்டி அபார்ட்மென்ட்டில் வசித்து வந்த ரேகா கடந்த சனிக்கிழமை பிணமாகக் கிடந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். ரேகா டைனிங் டேபிளில் சாய்ந்தபடி இறந்து கிடந்தார்.

விஷம்

ரேகாவின் உடல் அருகே ஒரு கிளாஸில் குளிர்பானம் இருந்தது. இதனால் அவர் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்பட்டது.

புற்றுநோய்

ரேகா கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்துள்ளார். ரேகாவுக்கு குழந்தைகள் இல்லை.

கணவர்

ரேகாவின் கணவர் மோகன் துபாயில் வேலை செய்து வருகிறார். அவர் இரண்டு நாட்களாக ரேகாவுக்கு போன் செய்தும் எடுக்காததால் அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் ரேகாவின் வீட்டிற்கு சென்றபோது அவர் பிணமாகக் கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Buzz is that actress Rekha Mohan committed suicide by consuming poison.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos