»   »  விவாகரத்து: கணவரிடம் இருந்து ரூ. 10 கோடி ஜீவனாம்சம் கேட்கிறாரா நடிகை?

விவாகரத்து: கணவரிடம் இருந்து ரூ. 10 கோடி ஜீவனாம்சம் கேட்கிறாரா நடிகை?

Posted by:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கணவர் அர்பாஸ் கானை பிரிய நடிகை மலாய்க்கா அரோரா கான் ரூ.10 கோடி ஜீவனாம்சம் கேட்பதாக கூறப்பட்டது.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானுக்கும், நடிகை மலாய்க்கா அரோராவுக்கும் கடந்த 1998ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு அர்ஹான்(14) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் அர்பாஸும், மலாய்க்காவும் பிரிந்துவிட்டனர்.

விவாகரத்து

தாங்கள் பிரிந்துவிட்டதாக மலாய்க்காவும், அர்பாஸும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தனர். அவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகினர். அர்பாஸை பிரியும் முடிவை மலாய்க்கா தான் எடுத்தாராம்.

சல்மான்

மலாய்க்காவுக்கு தனது கணவர் அர்பாஸ் அவரின் அண்ணன் சல்மான் கானின் நிழலில் வசிப்பது பிடிக்கவில்லை. சுயமாக முன்னேறுமாறு கூறினாராம். அது நடக்காததால் கணவரை பிரிந்துவிட்டாராம்.

ரூ.10 கோடி

அர்பாஸிடம் இருந்து மலாய்க்கா ரூ.10 கோடி ஜீவனாம்சம் கேட்டதாக கூறப்பட்டது. இது குறித்து விசாரித்தபோது மலாய்க்கா அர்பாஸிடம் இருந்து ஒரு பைசா கூட கேட்கவில்லை என்பது தெரிய வந்தது.

மகன்

மலாய்க்கா வீட்டை விட்டு வெளியேறியபோது மகனையும் உடன் அழைத்துச் சென்றுவிட்டார். மலாய்க்காவுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் ஏற்பட்ட தொடர்பும் விவாகரத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.

English summary
We all have read the stories that said that Malaika Arora Khan has asked for Rs 10 Crores from estranged husband Arbaaz Khan as divorce alimony but it seems that there is no truth behind these reports.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos