»   »  தனுஷை இயக்குவதை விட அவருடன் வேலை பார்ப்பது நல்ல அனுபவம் -ஒளிபதிவாளர் வேல்ராஜ்

தனுஷை இயக்குவதை விட அவருடன் வேலை பார்ப்பது நல்ல அனுபவம் -ஒளிபதிவாளர் வேல்ராஜ்

தனுஷை ஒரு நடிகனாக இயக்குவதை விடவும் அவரிடம் ஒளிப்பதிவாளராக வேலை பார்ப்பது நல்ல அனுபவமாக உள்ளது என ஒளிபதிவாளர் வேல்ராஜ் கூறியுள்ளார்.

Written by: Suganthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: பவர்பாண்டி திரைப்படத்தை தனுஷ் இயக்கியுள்ள காரணத்தால், அப்படத்தின் மீது எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது. அப்படத்தின் ஒளிப்பதிவாளரான வேல்ராஜ் தனுஷ் குறித்துக் கூறும்போது தனுஷை இயக்குவதை விட அவருடன் சேர்ந்து வேலை பார்ப்பதே நல்ல அனுபவம் என்று கூறியுள்ளார்.

ஒளிபதிவாளர் வேல்ராஜ், தனுஷை நாயகனாக வைத்து வேலையில்லா பட்டதாரி, தங்கமகன் ஆகிய இரு படங்களை இயக்கினார். தற்போது தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தின் ஒளிபதிவாளர் வேல்ராஜ், தனுஷ், பவர் பாண்டி படம், ராஜ்கிரண் குறித்து பேசினார்.


 Directing Dhanush is different from working with him as a cinematographer - Velraj

தனுஷை ஒரு நடிகராக வைத்து இயக்குவதை விட, அவரிடம் ஒரு சினிமாட்டோகிராபராக வேலைபார்ப்பதுதான் பிடித்திருக்கிறது. காரணம் பவர் பாண்டி படத்தில் அவர் நடிகர்களிடம் தன்மையாக நடந்துகொண்டதைக் கண்டு, அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்.


அதேபோல், இந்தப் படத்தில் என் விருப்பம் போல் வேலை செய்ய அனுமதித்தார். சென்னை, ராமநாதபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ஷூட் செய்தோம். அதில் சாலைகளில் படம்பிடித்தது அதிகம் பேசப்படும்.


ராஜ்கிரண் ஆன்மீகத்தில் அதிக பற்றுடையவர் என்பதாலும் சீனியர் என்பதாலும் அவரை வீட்டில் ஒரு பெரியவர் போலவே மதித்தேன் என வேல்ராஜ் கூறினார்.

English summary
Directing Dhanush is different from working with him as a cinematographer said Velraj, who is the cinematographer of Power Pandi film.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos