twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குநர் அட்லீ- நடிகை ப்ரியா நிச்சயதார்த்தம்.. ஆர்யா- நயன்தாரா ஜோடியாக வந்து வாழ்த்து!

    By Shankar
    |

    ராஜா ராணி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீக்கும், நடிகை ப்ரியாவுக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

    Director Atlee - Priya engagement

    ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி படம் இயக்கி பிரபலமானார். இப்போது விஜய்யை வைத்து படம் இயக்கும் அளவுக்கு முக்கியமான இயக்குநராகியுள்ளார்.

    Director Atlee - Priya engagement

    இவருக்கும் சின்னத்திரையில் அறிமுகமாகி, இப்போது பெரிய திரையில் நடித்துவரும் பிரியாவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. இது காதல் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    சூர்யா-அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘சிங்கம்' படத்தில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்தவர் ப்ரியா. கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல' படத்தில் கார்த்திக்கு தங்கையாக நடித்துள்ளார்.

    arya and nayan

    அட்லி - பிரியா திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. நடிகர் ஆர்யா, நடிகை நயன்தாரா உள்பட பலரும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர். திருமணம் வரும் நவம்பர் மாதம் 9-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The engagement of Raja Rani director Atlee - Actress Priya was held in Chennai on Sunday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X