Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இனிதே முடிந்தது அட்லி - ப்ரியா திருமணம்...!
சென்னை: இயக்குநர் அட்லி - பிரியா திருமணம் இன்று சென்னையில் நடந்தது. மாலை வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
ஆர்யா, நயன்தாரா, ஜெய் மற்றும் நஸ்ரியா என நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த ராஜாராணி படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் அட்லி. அதேபோல், டிவியில் கனாக்காணும் காலங்கள் தொடரிலும், சிங்கம், நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளவர் நடிகை பிரியா.
கடந்த ஏழு ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து, பின்னர் காதலர்களாக மாறிய அட்லி - பிரியா, இன்று தம்பதிகளாகியுள்ளனர்.
அட்லி - ப்ரியா திருமணம படங்கள்
நிச்சயதார்த்தம்...
இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த செப்டம்பர் மாதம் இவர்களது நிச்சயதார்த்தம் சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
வரவேற்பு...
இதையடுத்து இன்று காலை திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வாழ்த்து...
திருமண பந்தத்தில் இணைந்த அட்லி - பிரியா ஜோடியை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்தினர்.
திரையுலகப் பிரபலங்கள்...
மாலை நடைபெற உள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்த உள்ளனர்.