»   »  சும்மா இருந்த தனுஷ் இயக்குனர் ஆனதற்கு யார் காரணம் தெரியுமா?

சும்மா இருந்த தனுஷ் இயக்குனர் ஆனதற்கு யார் காரணம் தெரியுமா?

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் தான் இயக்குனர் அவதாரம் எடுக்க யார் காரணம் என்பதை தெரிவித்துள்ளார்.

ஹீரோவாக கோலிவுட் வந்தவர் தனுஷ். சுள்ளான் போன்று இருக்கும் தனுஷை பார்த்தவர்கள் இவன் எல்லாம் ஹீரோவாம் என கிண்டல் செய்தார்கள். தன்னை பார்த்து கிண்டல் செய்தவர்கள் கண் முன்பே வளர்ந்து முன்னணி ஹீரோவாக நிற்கிறார்.


நடிகர், பாடகர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளராக இருந்து வந்த தனுஷ் தற்போது இயக்குனர் ஆகியுள்ளார்.


பவர் பாண்டி

தனுஷ் இயக்கும் பவர் பாண்டி படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. பவர் பாண்டியில் ராஜ்கிரண் ஹீரோவாக நடித்து வருகிறார். ராஜ் கிரணுக்கு ஜோடியாக நதியா நடிக்கிறார். படத்தில் பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்டோரும் உள்ளனர்.


தனுஷ்

நடிப்பு, தயாரிப்பு என்று ஏற்கனவே படுபிசியாக இருக்கிறீர்களே இதில் படத்தை இயக்க எப்படி நேரம் கிடைக்கிறது என்று கேட்டதற்கு தனுஷ் கூறுகையில், நான் என் வேலையை விரும்பி செய்கிறேன். அதனால் எனக்கு அலுப்பு ஏற்படுவது இல்லை என்றார்.


செல்வராகவன்

கோலிவுட், ஹாலிவுட் என பிசியாக இருக்கும்போது டைரக்ஷனில் குதித்துள்ளீர்களே. இதற்கு யார் காரணம் என்றதற்கு தனுஷ் கூறுகையில், என் அண்ணன் செல்வராகவன் ஊக்குவித்ததால் இயக்குனர் ஆகியுள்ளேன் என்றார்.


தொடரி

தனுஷ் நடித்துள்ள தொடரி படம் நாளை மறுநாள் ரிலீஸாகிறது. படம் ரிலீஸாவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தனுஷ் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


English summary
Dhanush said that the confidence given to him by big bro Selvaraghavan is the reason for him taking director avatar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos