twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமலாபால் துணிகளை துவைக்கும் கணவர் ஏஎல்.விஜய்!

    By Mayura Akilan
    |

    நடிகை அமலா பாலின் துணிகளை துவைப்பது உள்ளிட்ட வீட்டு வேலைகளை அவரது கணவரும் இயக்குநருமான விஜய் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இயக்குநர் விஜயும், நடிகை அமலா பாலும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு நடிகை அமலா பால் சில படங்களில் நடித்து வருகிறார். தனது கணவர் தனக்கு உதவி செய்வதாக ஒரு கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளார்.

    ஏரியல் நிறுவனம் நடத்தும் நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகை ஷில்பாஷெட்டி தூதுவராக உள்ளார். இதே நிகழ்ச்சிக்கு தமிழகத்தின் சார்பில் நடிகை அமலா பால் தூவராக நியமிக்கப்படுள்ளார்.

    பெண்களின் வேலை

    பெண்களின் வேலை

    இந்தியப் பெண்களின் உணர்வுகளை எதிரொலிக்கின்ற ஏரியல் இந்தியா, ஒரு தேசிய அளவிலான விவாதத்தை ஆரம்பித்து வைத்து "துணி துவைப்பது பெண்கள் மட்டுமே செய்கின்ற வேலையா?" என்ற ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பி புகழ்பெற்ற பிரபலங்களுடன் இணைந்திருக்கின்றது.

    சமத்துவமில்லை

    சமத்துவமில்லை

    சென்னை, பெங்களுரூ மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பெண்களுள் 73%க்கும் அதிகமான பெண்கள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே வீட்டில் சமத்துவமில்லாத ஏற்றத்தாழ்வு நிலை நிலவுவதாக கருதுகின்றனர் என்று கருத்தாய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

    பெண்களின் வேலை

    பெண்களின் வேலை

    சென்னை, பெங்களுரு,ஹைதராபாத்தில் உள்ள ஆண்களில் 80 % பேர் துணி துவைப்பது பெண்களின் வேலை என்று நம்புவதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன

    பெண்களுக்கு துணையாக

    பெண்களுக்கு துணையாக

    இதன் அறிமுக நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை அமலா பால் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அமலா பால், "வீட்டு வேலைகளில் பெண்களுக்கு ஆண்கள் துணையாக இருக்க வேண்டும். எனது வாழ்க்கையில் அது ரொம்ப அதிகமாகவே உள்ளது.

    துணி துவைக்கிறார்

    துணி துவைக்கிறார்

    நான் எதிர்ப்பார்த்தை விடவும், எனக்கு ரொம்பவே உதவியாக இருக்கிறார் எனது கணவர் விஜய். எனது துணிகளை துவைப்பது, அயன் போடுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் என்னுடன் பகிர்ந்துக்கொள்கிறார் என்று கூறினார் அமலாபால்.

    English summary
    The survey was released in the city on Wednesday, in association with Ariel, by actor Amala Paul, who said, “Education will not change mindsets. It is respect for the women that will.”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X