»   »  என்னை நோக்கிப் பாயும் தோட்டா... கௌதம் ஸ்டைலில் கோட்டிற்கு அந்தப் பக்கமா? இந்தப் பக்கமா?

என்னை நோக்கிப் பாயும் தோட்டா... கௌதம் ஸ்டைலில் கோட்டிற்கு அந்தப் பக்கமா? இந்தப் பக்கமா?

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள என்னை நோக்கிப் பாயும் தோட்டா காதல் திரைப்படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக கௌதம் மேனன் படங்களை காதல், ஆக்‌ஷன் என இரண்டு வகைகளுக்குள் அடக்கி விடலாம். மாற்றி மாற்றி இந்த இரண்டு வகைப்படங்களைக் கொடுத்து தன் ரசிகர்களை திருப்தி படுத்துவது அவரது ஸ்டைல்.

காதல் என்றால் அப்படி ஒரு காதல், ஆக்‌ஷன் என்றால் பிரமிக்க வைக்கும் ஆக்சன் என தன் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி மலைக்க வைத்து விடுவார் கௌதம்.

அச்சம் என்பது மடமையடா...

அச்சம் என்பது மடமையடா...

அந்தவகையில், என்னை அறிந்தால் ஆக்‌ஷன் படத்தைத் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா படத்தை வெளியிட்டார் கௌதம். பாடல்கள், போஸ்டர்களைப் பார்த்து இது கௌதமின் அக்மார்க் காதல் படம் என ரசிகர்கள் கருதினர். ஆனால், இடைவேளைக்குப் பின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளால் மிரள வைத்தார் கௌதம்.

என்னை நோக்கிப் பாயும் தோட்டா...

இந்நிலையில், அடுத்ததாக தனுஷின் என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார் கௌதம். படத்தின் தலைப்பை பார்த்தே இது நிச்சயம் அதிரடி ஆக்‌ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு, இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்ப அதிர்ச்சியைத் தந்துவிட்டது.

பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்...

பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்...

காரணம், மின்னலே, விண்ணைத் தாண்டி வருவாயா பட ரேஞ்சுக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டரில் காதல் நிரம்பி வழிகிறது. ஒரு போஸ்டரில் கதாநாயகி மேகா ஆகாஷை தனுஷ் முத்தமிடுவது போலவும், இரண்டாவது போஸ்டரில் கல்லூரி படிக்கும் இளைஞர் தோற்றத்தில் தனுஷ் இருப்பது போலவும், மூன்றாவது போஸ்டரில் நடுத்தர வயதான தனுஷ் முகத்தில் சில காயங்களுடன் இருப்பது போலவும் வெளியிடப்பட்டுள்ளது.

எகிறும் எதிர்பார்ப்பு...

எகிறும் எதிர்பார்ப்பு...

இதனால், இப்படம் ரொமான்ஸ் திரைப்படமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது. அதே நேரத்தில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் இப்படத்தில் குறைவிருக்காது என சொல்லாமல் சொல்கிறது முகத்தில் காயங்களுடன் தனுஷ் நிற்கும் போஸ்டர்.

இதனால், இப்போதே இப்படம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The first look posters of Dhanush’s much-awaited film Enai Nokki Paayum Thotta were released on Sunday on social media. Dhanush sports two different looks in the film, one clean-shaven and the other with a beard.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos