»   »  நாளை முதல் 'எனக்கு இன்னோரு பேர் இருக்கு' டீசர்!

நாளை முதல் 'எனக்கு இன்னோரு பேர் இருக்கு' டீசர்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

படத்தின் தலைப்பு, தன் தோற்றம் அனைத்திலும் பாட்ஷாவின் சாயல் தெரியும்படி ஜிவி பிரகாஷ் நடித்துள்ள படம் எனக்கு இன்னோரு பேர் இருக்கு.

லைகா புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சாம் ஆண்டன் இயக்க, கயல் ஆனந்தி நாயகியாக நடிக்கிறார்.


Enakku Innoru Per Irukku teaser from Tomorrow

டார்லிங் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் சாம் ஆண்டனுடன் நடிகர் ஜீ.வி.பிரகாஷ் குமார் இணையும் இரண்டாவது படம் இது. திரிஷா இல்லனா நயன்தாரா வெற்றிக்கு பிறகு நடிகை ஆனந்தியுடன் இணைந்துள்ளார்.


இப்படத்தின் முதல் முன்னோட்டமான டீசர் நாளை ஏப்ரல் 28 அன்று வெளியாகவுள்ளது. "எனக்கு இன்னோரு பேர் இருக்கு" படத்தின் மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், இப்போது டீசரை வெளியிடவிருக்கிறார்கள்.


டீசர் வெளியீட்டுக்குப் பின் படத்தின் இசை வெளியீடு நடக்கவிருக்கிறது. படத்துக்கு இசையும் ஜிவி பிரகாஷ்தான்.

English summary
The teaser of GV Prakash starring Enakku Innoru Per Irukku will be released on April 28h, Tomorrow.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos