» 

லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது ’ஜெயம்’ ராஜாவின் ‘என்ன சத்தம் இந்த நேரம்’...

Posted by:

சென்னை: ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளைப் பற்றிய படமான 'என்ன சத்தம் இந்த நேரம்' படம் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுகிறது.

சத்தம் போடாதே, ராமன் தேடிய சீதை படங்களில் நடித்த நிதின் சத்யா சின்ன இடைவெளிக்குப் பிறகு கதாநாயகனாகும் படம் 'என்ன சத்தம் இந்த நேரம்'. ஹைதராபாத் மற்றும் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இந்தப் படம் தயாராகியுள்ளது.

ஏவி புரொடக்‌ஷன் சார்பில் ஏவி அனூப் தயாரிக்க இப்படத்தை குரு ரமேஷ் இயக்கியுள்ளார்.

இது தான் கதை...

உயிரியல் பூங்காவுக்கு வரும் நான்கு சகோதரிகள் தொலைந்து போகிறார்கள். பூங்கா பாதுகாவலரான நிதின் சத்யா ஒரேநாளில் அவர்களை தேடி கண்டு பிடிப்பது தான் கதை.

முதல்முறையாக...

ஹைதராபாத் உயிரியல் பூங்காவில் 95 சதவீத படப்பிடிப்பை நடத்தினர். மீதி ஐந்து சதவீதம் செண்னை வண்டலூர் உயிரியல் பூங்கா. இங்கு படப்பிடிப்பு நடத்துவது இதுவே முதல்முறை என வண்டலூர் உயிரியல் பூங்கா ஊழியர்கள் கூறியதாக பட இயக்குனர் குரு ரமேஷ் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ராஜா...

இந்தப் படத்தின் முக்கிய விஷயம் முன்னணி இயக்குநர் ஜெயம் ராஜா முக்கிய பாத்திரத்தில் நடிப்பதுதான். அவருடன் காதல் மன்னன் புகழ் மானுவும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

ஒரே பிரசவம்...நால்வர்

படத்தில் நான்கு சகோதரிகளாக நடித்திருப்பவர்கள் ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். நீண்ட தேடுதலுக்குப் பிறகு சர்ச் பார்க் கான்வென்டில் படித்துக் கொண்டிருந்த அதிதி, அக்ரிதி, ஆப்தி,மற்றும் அக்‌ஷதி என்ற 8 வயது சிறுமிகளைத் தேடிப் பிடித்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.

விண்ணப்பம்...

ஒரு படத்தில் ஒரே நேரத்தில் பிறந்த நான்கு சகோதரர்கள் நடிப்பதும் இதுதான் முதல்முறையாம். இதனால் இப்படம் லிம்கா சாதனைக்கு விண்ணப்பித்தார்கள்.

See next photo feature article

லிம்கா சாதனை...

படத்தை ஷூட்டிங் ஸ்பாட் சென்று ஆய்வு செய்த லிம்கா குழுவினர், லிம்க சாதனைப் புத்தகத்தில் படத்தை இடம் பெற சம்மதித்தனர். அதன்படி, இன்று படக்குழுவினரைச் சந்தித்து அதற்கான சான்றிதழை அளிக்க இருக்கிறார்கள்.

Read more about: enna satham intha neram, என்ன சத்தம் இந்த நேரம், ஜெயம் ராஜா
English summary
It was reported earlier that the movie Enna Saththam Indha Neram, that has Jeyam Raja and Maanu in the lead will feature Adhiti, Aakrithi, Akshathy and Aapthi who are 8 year old quadruplets. The latest update is that the attempt has been appreciated by the Limca book of records and the team would visit the shoot location at ECR tomorrow, 31.10.2013 to issue the certificate.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos