twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிறந்த தமிழ்ப் படத்திற்கு விருது: அமெரிக்க தமிழ் அமைப்பு ஃபெட்னா அறிவிப்பு

    By Shankar
    |

    சான் ஓசே(யு.எஸ்): வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை (FeTNA) யின் சார்பில் சிறந்த தமிழ்ப் படத்துக்கான புதிய விருது அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

    தமிழர் வாழ்வியல், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படத்துக்கு இந்த ஆண்டு நடைபெறும் ஃபெட்னா தமிழ் விழாவில் விருது வழங்கப்படும்.

    சிலிக்கான் வேலியில் ஃபெட்னா 2015 தமிழ் விழா

    அமெரிக்காவில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் ஃபெட்னா வின் 28 வது தமிழ் விழா சிலிக்கான் வேலியின் சான் ஓசே நகரில் ஜூலை 2ம் தேதி முதல் நடைபெறுகிறது. மிசிசிபி நதிக்கு மேற்கே உள்ள அமெரிக்க நிலப்பரப்பை, க்ளார்க் - லூயிஸ் இரட்டையர்கள் நதியை தாண்டிய இடமான செயிண்ட் லூயிஸ் நகரிலிருந்து தான் கண்டுடெடுத்தார்கள். அமெரிக்க வரலாற்றில் 'West Exploration' என்ற பெருமை பெற்ற நகரம் செயிண்ட் லூயிஸ் ஆகும். இது வரையிலும் மிசிசிபி நதிக்கு கிழக்குப் பகுதி நகரங்களில் மட்டுமே நடைபெற்று வந்த ஃபெட்னா தமிழ் விழாக்கள் கடந்த ஆண்டு செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெற்றது. அங்கிருந்து அடுத்த இடமாக மேற்கு கரையோர சான் ஓசே நகருக்கு சென்றிருப்பது ஃபெட்னா வரலாற்றிலும் முக்கியத்தும் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

    Fetna announces award for best Tamil movie

    மூவாயிரம் தமிழர்கள் சங்கமம்

    கம்ப்யூட்டர் துறையில் கொடிகட்டி பறக்கும் பெரும்பாலான அமெரிக்கத் தமிழர்கள் சிலிக்கான் வேலி பகுதியில் வசித்து வருகிறார்கள். பேரவையும் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றமும் இணைந்து தமிழ் விழாவை நடத்துகிறார்கள். இசைப் பேரறிஞர் வீ.ப.கா சுந்தரம் நூற்றாண்டு விழா மற்றும் பாபநாசம் சிவன் 125 ஆண்டு விழாவாக கொண்டாடப் படுகிறது. சான் ஓசே சிட்டி நேஷனல் சிவிக் ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இந்த விழாவில் சுமார் மூவாயிரம் தமிழர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.

    தொழில் முனைவோர் கருத்தரங்கம்

    ஸ்டார்ட் அப் கம்பெனிகளுக்கு பெயர் பெற்ற சிலிக்கான்வேலியில், புதிய தொழில்கள் நிறுவி வெற்றி பெற்ற தமிழர்கள், தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. வெவ்வேறு துறை சார்ந்த பல்வேறு சாதனையாளர்கள், புதிதாக தொழில்கள் தொடங்க விரும்புபவர்களுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் இது அமையும். ஏராளமான தொழில் அதிபர்கள், வல்லுனர்கள் கலந்து கொள்கிறார்கள். முந்தைய ஆண்டுகளை விட, இந்த கருத்தரங்கத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

    அனைத்து தரப்பினருக்கும் போட்டிகள்

    குழந்தைகளுக்கான வட அமெரிக்கக் குறள் தேனீப் போட்டி, கவிதைப் போட்டி, சிறுகதைப் போட்டி, புகைப்படப் போட்டி உட்பட ஏராளமான போட்டிகள் நடத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட குறும்படப் போட்டியும் உண்டு. இளம் எழுத்தாளர் விருதும் வழங்கப்பட உள்ளது.

    எமி ஜாக்சனும் இன்னிசை விருந்தும்

    ஐ படப் புகழ் எமி ஜாக்சன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். பென்னட் அண்ட் பேண்ட் குழுவினருடன் பின்னணிப் பாடகர் ஹரிசரண், ஆலப் ராஜு, ரோஷிணி, பூஜா, ப்ரகதி ஆகியோர் பங்கேற்கும் இன்னிசை நிகழ்ச்சி இடம் பெறுகிறது. பாகிரதி இயக்கத்தில் கலிஃபோர்னியா நாடகக் கலைஞர்களின் பங்கேற்பில் சிவகாமியின் சபதம் நாட்டிய நாடகம் நடைபெறுகிறது. கவிஞர் சுமதிஸ்ரீ, தமிழிசை முனைவர் சௌம்யா, பூவுலகின் நண்பர்கள் சுந்தர ராஜன், முனைவர் மார்கரெட் பாஸ்டின், தி.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ், விஐடி வேந்தர் விஸ்வநாதன், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், பேராசிரியர் அப்துல்காதர், எழுத்தாளர் பூமணி, கல்யாண மாலை மோகன் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொள்கிறார்கள்

    முதன் முறையாக தமிழ்த் திரைப்படத்திற்கு விருது

    அமெரிக்கத் தமிழர்களின் வாழ்க்கையில் தமிழ் சினிமா முக்கிய அங்கம் வகிக்கிறது என்றால் மிகையல்ல. 60 - 70ம் ஆண்டுகளின் காலக்கட்டங்களில், பல்கலைக்கழக வளாகங்களிலோ அல்லது தனி அரங்குகளிலோ திரைப்படங்கள் திரையிடும் போது தான் தமிழர்களை ஒன்றாக காண முடிந்தது. பல முன்னோடித் தமிழ்ச் சங்கங்கள் உருவாவதற்கு, அந்த காலக்கட்ட தமிழ்த் திரைப்படங்கள் பேருதவி புரிந்துள்ளன.

    தற்போது அமெரிக்காவின் அனைத்து மாநிலங்களிலும், பெரு நகரங்கள் சிறு நகரங்கள் என தமிழர்கள் வசிக்கும் இடமெல்லாம், வியாழக்கிழமையே தமிழ்ப் படங்கள் சிறப்புக் காட்சிகளுடன் வெளியாகின்றன.

    அமெரிக்கத் தமிழர்களால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கு இந்த ஆண்டு பேரவை விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.

    அமெரிக்கத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு

    தமிழர் வாழ்வியலை வெளிக்காட்டும், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து மொழியைச் சிதைக்காமல், சமூக சூழலைப் பற்றிய சிறந்த திரைப்படங்களை ஊக்குவிப்பதற்காக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் பேரவைக் குழு தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களிலிருந்து, அமெரிக்கத் தமிழர்களின் பெரும்பான்மையான வாக்குகள் பெறும் திரைப்படத்திற்கு விருது வழங்கப்படும். சிறந்த இயக்குனருக்கும் விருது உண்டு.

    முந்தய பேரவை விழாக்களில் கலந்து கொண்டவர்கள் மற்றும் இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதிக்குள் பதிவு செய்பவர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கலாம்.

    நோ டபுள் மீனிங் டயலாக்

    வேறு மொழிப் படங்களின் மறு ஆக்கம், தழுவல், இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசக் காட்சிகள் இல்லாத படங்கள் மட்டுமே பரீசிலிக்கப்படும். எந்த ஒரு சமூகத்தையோ, படிக்காதவர்களையோ, கிராமவாசிகளையோ, மாற்றுத் திறனாளிகளையோ அல்லது ஆங்கிலம் பேசத்தெரியாதவர்களையோ அவதூறாகவோ, கேலியாகவோ சித்திரிக்காமல் இருக்க வேண்டும். பெண்களை வெறும் கவர்ச்சி பொருளாக மட்டும் சித்தரிக்காமல் இருக்க வேண்டும்.

    -இர தினகர்

    English summary
    FeTNA, the biggest Tamil forum in North America has announced new award for best Tamil movie from this year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X