twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இடது கைப்பழக்கம் உடையவரின் கை செயல்படாமல் போனால்...? - 'பீச்சாங்கை' திரைப்பட இயக்குநர் அசோக்

    விரைவில் திரைக்கு வரவுள்ள பீச்சாங்கை திரைப்படத்தின் இயக்குநர் அசோக், இடது கை பழக்கமுள்ளவர் அதை இழக்கும் போது சந்திக்கும் பிரச்சனைகள் தான் பீச்சாங்கை திரைப்படத்தின் கதை என கூறியுள்ளார்.

    By Suganthi
    |

    சென்னை: இடது கைப் பழக்கம் உள்ளவரின் கை திடீரென செயல்படாமல் போனால் என்ன ஆகும்? என்பதுதான் 'பீச்சாங்கை' திரைப்படம் என்கிறார் இயக்குநர் அசோக். அவரும் அவரது குழுவினரும் ஒன் இந்தியா தமிழ் வாசகர்களுக்கென சிறப்பு பேட்டி அளித்துள்ளனர்.

    தனியார் தொலைக்காட்சியில் 'நாளைய இயக்குநர்' என்ற நிகழ்ச்சியில் பரிசு பெற்றவர் அசோக். அவர் இயக்கியுள்ள திரைப்படம் பீச்சாங்கை. விரைவில் வெளிவரவுள்ள இத்திரைப்படத்தை குறித்து இயக்குநர் அசோக் தெரிவிக்கையில், ''இடது கைப்பழக்கம் உடைய ஒருத்தருக்கு, திடீரென அந்த கை செயல்படாமல் போனால் என்ன ஆகும்? அவர் எப்படி தன் திருட்டுத் தொழிலை செய்வார் என்பதுதான் கதை. இதனை காமெடி கலந்து கொடுத்திருக்கிறோம்.

     A film about left hander is Peechangai

    குழந்தைகளுடன் குடும்பமாக வந்து பார்க்கும் வகையில் இப்படம் இருக்கும். இது நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற படம். அதைத்தான் திரைப்படமாக செய்துள்ளோம்'' என கூறினார்.

    இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதமன். இசையமைப்பாளர் பாலமுரளி பாலு மற்றும் சுகுமாறன் கணேஷ் பாடல்களை எழுதியுள்ளார். இப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன.

    English summary
    A left hander if suddenly lost his action of left hand due to accident, what will happen to him is the one line of Peechangai film said its debut director Ashok
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X