twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுமூக முடிவுக்கு வந்தது பத்திரிகையாளர்கள் - திரைப்பட பாதுகாப்புப் படை பிரச்சினை!

    By Shankar
    |

    சென்னை: தமிழ் திரைப்பட ஊடகவியலாளர்கள் - திரைப்பட பாதுகாப்புப் படை இடையிலான பிரச்சினை நேற்று சுமூக முடிவுக்கு வந்தது.

    இதுகுறித்து அனைத்து தமிழ் திரைப்பட ஊடகவியலாளர் கூட்டமைப்பின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:

    தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய திரைப்பட பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இணைய தளங்களை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் என்றும் எமக்கு தகவல் கிடைத்தது.

    வெள்ளம் வரும் முன் அணை கட்ட வேண்டும் என்கிற எண்ணத்தில், முன் எச்சரிகை நடவடிக்கையாக, கடந்த 21.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவசரக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    அந்தக் கூட்டத்தில், மேற்படி அமைப்பின் முடிவுக்கு எதிராக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    அந்த தீர்மானம் அனைத்து இணையதளங்களுக்கும் அனுப்பப்பட்டு, பிரசுரிக்கப்பட்டன. அதோடு, நமது எதிர்ப்பையும், கண்டனங்களையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தோம்.

    நமது இந்த பதில் நடவடிக்கை காரணமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மன வருத்தம் அடைந்த தகவல் நம்மை வந்தடைந்தது. அதன் காரணமாகவும், திரைப்படத்துறைக்கும் ஊடகத்தினருக்கும் இடையிலான மோதலை மேலும் வளர விடக்கூடாது என்ற நல்லெண்ணத்திலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் அகில இந்திய திரைப்படத்தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் திரு ஜி.சிவா ஆகியோரும், இரு தரப்பினரையும் சந்திக்க வைத்து, பிரச்சனையை சுமுகமாக தீர்த்து வைக்க வேண்டும் என்கிற நல்லெண்ண முயற்சியை மேற்கொண்டனர்.

    அவர்களின் முயற்சியின்படி, 25.09.2014 அன்று - தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளை உள்ளடக்கிய திரைப்படப் பாதுகாப்பு கூட்டமைப்பு உடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

    அப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, இணையதளங்களை புறக்கணிக்கும் முடிவை அவர்கள் தற்காலிகமாக திரும்பப் பெற்றுக்கொள்ள உடன்பட்டனர். அதோடு, இப்பிரச்சனை குறித்து விரைவில் நிரந்தர தீர்வு காணவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    Film media journos - film protection federation issue solved

    அதன் தொடர்ச்சியாக, 21.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற நமது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளோம்.

    மேலும், ஊடகத்தினருக்கும், திரைப்படத்துறைக்கும் இடையிலான பிரச்சனை நிலவிய இக்கட்டானநிலையில் எமக்கு ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருந்த நடிகர் விஷால் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    இப்பிரச்சினை சுமுகமானமுறையில் தீர்க்கப்பட்டதற்கு காரணமாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளர் ராதாரவி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் அகில இந்திய திரைப்படத்தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜி.சிவா, தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் டி.சிவா, தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் திரு.விக்ரமன், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெரு துளசிபழனிவேல் மற்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், தனிப்பட்ட முறையில் உதவிய பி.ஆர்.ஓ. நண்பர்களுக்கும் நமது நன்றி.

    -இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

      English summary
      The issue between Tamil film media journalists and Tamil film producers council has solved politely.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X