»   »  முதல் முறையாக ஒரே நேரத்தில் சீனாவிலும் வெளியாகும் ரஜினியின் கபாலி!

முதல் முறையாக ஒரே நேரத்தில் சீனாவிலும் வெளியாகும் ரஜினியின் கபாலி!

Posted by:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழில் வெளியாகும் நேரத்திலேயே சீனாவிலும் வெளியாகும் முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெறுகிறது ரஜினியின் கபாலி.

Select City
Buy Kabali (U) Tickets

இதுவரை எந்த ரஜினி படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பும் வியாபாரமும் கபாலி படத்துக்குக் கிடைத்துள்ளது.


குறிப்பாக டீசர் வெளியான பிறகு படத்தின் வியாபாரம் சூடுபிடித்துவிட்டது.


First time Kabali gets simultaneous release in China & Hong Kong

மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் கபாலிக்கு கிடைத்துள்ள வரவேற்பு கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் கிடைக்கும் வரவேற்புக்கு நிகராக உள்ளது. இந்த நாடுகளில் தமிழ் மற்றும் மலாய் மொழிகளில் ஒரே நேரத்தில் கபாலி வெளியாகிறது.


இன்னொரு பக்கம் சீனாவில் இந்தப் படத்தை பெரிய அளவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு பட நிறுவனம் கபாலி உரிமையை பெரும் விலைக்குப் பெற்றுள்ளது. தமிழில் உலகெங்கும் வெளியாகும் நேரத்திலேயே ஹாங்காங் மற்றும் சீனாவிலும் கபாலி வெளியாகும்.


இதுவரை எந்த இந்தியப் படமும் இங்கு வெளியாகும்போதே சீனாவில் வெளியானதில்லை. அதற்கான அனுமதி அங்கே அத்தனை சுலபத்தில் கிடைப்பதில்லை. அந்த கட்டுப்பாட்டை உடைக்கும் வகையில், ஹாங்காங் நிறுவனம் மூலம் இந்தப் படத்தை வெளியிடவிருக்கிறார்கள்.

English summary
Indian films find it difficult to get a China release, and even if it releases, it’s months after its India release. Rajinikanth's Kabali will break this situation and release simultaneously on the same date in China and Honk Kong.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos