twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'முதல் திரையரங்க நிறுவனர்' சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்த தினம்.. ஒரு வித்தியாச விழா!

    By Shankar
    |

    சின்ன வயதில் டூரிங் கொட்டகைகளில் படம் பார்த்த நினைவுகளைக் கிளறிவிட்டது நேற்று நடந்த ஒன்பது குழு சம்பத் படத்தின் இசை வெளியீட்டு விழா.

    இது வெறும் இசை வெளியீட்டு விழா அல்ல... சினிமா தியேட்டர்களை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்திய சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பிறந்த நாளைக் கொண்டாடும் விழாவாக அமைந்தது. அவர் பிறந்த நாளை திரையரங்கு தினமாக நேற்று அறிவித்தனர்.

    Founder of Theaters Samikkannu Vincent's birthday

    இதற்காக திறந்த வெளியில் ஒரு பெரிய திரை அமைத்து, டூரிங் டாக்கீஸ் செட்டப்பை போட்டிருந்தார்கள். டீ ஸ்டால் எல்லாம் அமைத்து, காளி மார்க் குளிர்பானங்களை வழங்கி, அந்த பழைய நினைவுகளுக்கே அழைத்துப் போய்விட்டார்கள்.

    இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் நாசர், அப்புக்குட்டி, வேதிகா, இயக்குனர்கள் நவீன், கமலக் கண்ணன், குழந்தை வேலப்பன், தயாரிப்பாளர் தனஞ்செயன் கலந்துகொண்டனர்.

    நாசர் பேசுகையில், "சாமிக்கண்ணு அய்யாவுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், எந்த அளவுக்கு சினிமாவின் மேல் காதல் இருந்திருந்தால் அந்தக் காலத்திலேயே திரையரங்கைக் கட்டியிருக்க வேண்டும்," என்றார்.

    'மூடர்கூடம்' நவீன் பேசும்போது,

    "தியேட்டர்கள் தேவையா?'' என்று என்னிடம் கேட்டால் 'நான் தேவைதான்' என்றே கூறுவேன். காரணம் மக்களிடையே சமத்துவத்தை உண்டுபண்ணுவதே தியேட்டர்கள்தான்.

    'மூடர்கூடம்' படத்தின் ஒருபாடலுக்காக ஒரு பள்ளியில் ஷூட்டிங் நடத்தும்போதுதான் தெரிந்தது அங்கே படிக்கும் குழந்தைகளிடத்தில் கூட ஏற்றத் தாழ்வை உண்டு பண்ணியிருக்கும் வேளையில் அனைத்து மக்களிடையே சமத்துவத்தை உருவாக்குவதே தியேட்டர்கள்தான். அப்படிப்பட்ட தியேட்டரை உருவாக்கிய சாமிக்கண்ணு வின்சென்ட் பிறந்தநாளை 'தியேட்டர் டே'யாக அறிவிக்கும் இவ்விழாவுக்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி!''

    தனஞ்செயன்

    யுடிவி தனஞ்செயன் பேசும்போது, "இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரைப் பார்க்கும்போது 'பருத்தி வீரன்' படத்தை நினைவுபடுத்துகிறது. நிச்சயம் அப்படம் போலவே இப்படமும் வெற்றி பெற வேண்டும். ஏப்ரல் 18ஆம் நாளை இனி வரும் ஒவ்வொரு வருடமும் சாமிக்கண்ணு வின்சென்ட்டை நாம் நினைத்துப் பார்த்துக் கொண்டேயிருப்போம். அதற்கு காரணம் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாதான்.

    திருட்டு டிவிடியை நம்மால் ஒழிக்க முடியாது. ஆனால் சிறந்த படங்களை எடுத்தால் கண்டிப்பாக மக்கள் தியேட்டருக்கு வந்தே பார்ப்பார்கள். இது நான் பலமுறை நேரில் கண்ட உண்மை. இந்தப் படம் வெற்றிபெற என் வாழ்த்துகள்,'' என்றார்.

    நடிகை வேதிகா

    நடிகை வேதிகா பேசும்போது, "நான் சிறுவயதிலிருந்தே குடும்பத்தோடு ஞாயிற்றுக் கிழமை, வெள்ளிகிழமைகளில் படங்களை தியேட்டருக்கு சென்று பார்ப்போம். கொஞ்சம் பெரியவளானவுடன் என் நண்பர்களுடன் சென்று பார்ப்பேன்.

    தியேட்டர்கள்தான் நம்மில் எந்தப் பாகுபாட்டையும் ஏற்படுத்தாமல் நம்மை ரசிக்க வைக்கின்றன. சந்தோசப்பட வைக்கின்றன. எனவே அப்படிப்பட்ட தியேட்டரை உருவாக்கிய சாமிக்கண்ணு வின்சென்ட் அவர்களின் பிறந்த நாளை திரையரங்க தினமாகக் கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி," என்றார்.

    'மதுபானக்கடை' கமலக்கண்ணன் பேசும்போது,

    ''என் தாத்தா ஒரு தியேட்டர் ஓனர். எனவே நான் சிறு வயதில் தியேட்டர் ஆபரேட்டர் ரூமிலியே இருப்பேன். படம் பார்க்கும் மக்கள் படம் பார்த்து சந்தோசப்படுவதை நேரடியாகவே பார்த்தவன் நான். அப்படிப்பட்ட தியேட்டரை உருவாக்கிய சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பிறந்த நாளை பிறந்த நாளை திரையரங்க தினமாகக் கொண்டாடுவதில் எனக்கு பெருமையே'', என்றார்.

    நடிகர் அப்புக்குட்டி பேசும்போது,

    ''இந்த விழாவைப் பார்க்கும்போது எனக்கு என் ஊரில் படம் பார்க்கும் ஞாபகம் வந்துவிட்டது. தரையில் மண் குவித்து அதன் மேல் உட்கார்ந்து படம் பார்த்த ஞாபகம் வந்துவிட்டது. இந்த இசை வெளியீட்டு விழாவில் தியேட்டரை கண்டுபிடித்தவருக்கு பெருமை சேர்த்திருப்பது சூப்பர். இப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் பெரிய வெற்றி பெற்று, எனக்கும் அதிக சம்பளம் கொடுத்து மீண்டும் நடிக்க வாய்ப்பளிக்க வேண்டும்," என்றார்.

    ரஞ்சித்குமார் தயாரிப்பில், முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் அறிமுக இயக்குனர் ஜா.ரகுபதி இயக்கியுள்ள 'ஒன்பது குழி சம்பத்' விரைவில் திரைக்கு வருகிறது.

    English summary
    Onbathu Kuzhi Sambath movie audio launch has been held at Prasad Studios on Friday. The birth day of Samikkannu Vincent, the founder of the first theater also celebrated on the same stage.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X