»   »  இன்று ஒரு நாள் இரவில், ஆரண்யம் மற்றும் ஸ்பெக்டர்!

இன்று ஒரு நாள் இரவில், ஆரண்யம் மற்றும் ஸ்பெக்டர்!

Posted by:
Subscribe to Oneindia Tamil

தீபாவளிக்கு வெளியான படங்களின் வசூல் இவ்வளவு, அவ்வளவு என்று பொய்ச் செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த வெள்ளிக்கிழமை இரண்டு நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.

ஆனால் அந்த தமிழ்ப் படங்களைவிட பெரும் எதிர்ப்பார்ரப்பைக் கிளப்பியுள்ளது ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்பெக்டர்.

முதலில் இரு தமிழ்ப் படங்கள்...

ஒரு நாள் இரவில்

மலையாளத்தில் வெளியான ஷட்டர் படத்தின் ரீமேக் ஒரு நாள் இரவில். சத்யராஜ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தை எடிட்டர் ஆன்டனி முதல் முறையாக இயக்கியுள்ளார்.

ஆரண்யம்

புதுமுகம் ராம், நீரஜா ஷாஜி, இளவரசு, சிங்க முத்து நடித்துள்ள இந்தப் படத்தை புதிய இயக்குநர் குபேர்ஜி இயக்கியுள்ளார். காட்டை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள த்ரில்லர் இந்தப் படம்.

ஸ்பெக்டர்

டேனியல் க்ரெய்க் நான்காவது முறையாக ஜேம்ஸ்பாண்ட் வேடம் போட்டிருக்கும் படம் ஸ்பெக்டர். இதுவரை வந்த பாண்ட் படங்களிலேயே அதிக பொருட் செலவில் உருவாகியுள்ள படம். உலகெங்கும் ஏற்கெனவே வெளியாகிவிட்டது.

ஆர்வம்

படம் குறித்து கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், இந்தப் படத்தைப் பார்க்க தமிழ் ரசிகர்கள் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். அது படம் வெளியாகும் அரங்குகளின் முன்பதிவு நிலையைப் பார்த்தாலே தெரிகிறது.

English summary
Today Friday there are 2 direct Tamil Movies and James Bond movie Spectre releasing across the state.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos