» 

உதயம் என்எச் 4 Vs கவுரவம் Vs திருமதி தமிழ்!

Posted by:

விடுமுறைக் காலம் தொடங்கிவிட்டது. தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை பண்டிகையல்லாத பெரிய சீஸன் இதுதான்.

பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களை இந்த சீஸனில்தான் வெளியிடுவார்கள். ரஜினி, கமல், விஜய் போன்றவர்கள் கடந்த காலங்களில் அப்படித்தான் செய்துள்ளனர்.

இந்த ஆண்டு பெரிய படங்கள் எதுவும் கோடை விடுமுறைக்கு வராத நிலையில், நடுத்தரப் படங்கள் சில மட்டும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வருகின்றன.

கவுரவம்

அப்படி வரும் படங்களில் முக்கியமானது மொழி, அபியும் நானும் போன்ற அழகான படங்களைத் தந்த ராதா மோகனின் கவுரவம். வழக்கம் போல பிரகாஷ்ராஜ் தயாரிப்புதான் இதுவும். சிரிஷ், யாமி கவுதம் மற்றும் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளனர். சாதியக் கொடுமைகளை, சாதி கவுரவத்துக்காக நடக்கும் கொலைகளை படமாக்கியுள்ளார் ராதா மோகன்.

உதயம் என்எச்4

வெற்றிமாறன் கதை, திரைக்கதை எழுதியுள்ள இந்தப் படம் தமிழகத்தில் 275 அரங்குகளில் வெளியாகிறது. தயாநிதி, வெற்றிமாறன் தயாரிக்க, உதயநிதி வெளியிடுகிறார். சித்தார்த், அஷ்ரிதா ஷெட்டி நடித்துள்ளனர்.

திருமதி தமிழ்

சோலார் ஸ்டார் என்ற பட்டப் பெயருடன் களமிறங்கியிருக்கும் ராஜகுமாரன் தேவயானியின் முதல் படம். சொந்தத் தயாரிப்பு வேறு. ரசிகர்கள் பார்க்க வராவிட்டால் இழுத்து வந்து உட்கார வைப்போம் எனும் அளவுக்கு விளம்பரங்கள் தூள் பறக்கின்றன.

See next photo feature article

டப்பிங் படங்கள்

இந்த மூன்றைத் தவிர, யார் இவள் என்ற படமும் வெளியாகிறது. ரெஜினா, இரு கில்லாடிகள் ஆகிய இரு டப்பிங் படங்களும், இரு ஆங்கில டப்பிங் படங்களும் இன்று ரிலீசாகின்றன.

Read more about: friday releases, gouravam, வெள்ளிக்கிழமை ரிலீஸ், கவுரவம்
English summary
The summer season is in full flow, as a flood of medium and small movies hit the screen. The notable releases this week are Udhayam NH4, Gouravam and Thirumathi Tamil.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos